முகநூலில் நீங்கள் செய்யக்கூடாத 'அநாகரீகமான' 14 விசயங்கள்..!
முகநூல் - சில நேரம் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு விடயமாக இருக்கும், சில நேரம் மிகவும் வெறுப்படைய செய்யும் ஒன்றாகவும் இருக்கும். எப்போது முகநூல் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லையோ (முக்கியமாக நமது முகநூல் நண்பர்களால்) அப்போது அதன் மீது நமக்கு தானாக வெறுப்பு ஏற்படுகின்றது. அப்படியாக, முகநூலில் செய்யவே கூடாத 'அநாகரீகமான' 14 விடயங்களை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை தெரிந்து வைத்துக் கொள்ளவதால் உங்கள் முகநூல் நண்பர்கள் உங்களை 'நேசிப்பதற்கான வாய்ப்பு' அதிகமாகிக் கொண்டே போகும்..!
செய்யக் கூடாதவை #1 : செல்ப்-ப்ரோமோஷேன் (Self Promotion) செய்வதற்கு உங்கள் தனிப்பாட்ட முகநூல் அக்கவுன்ட்டை பயன் படுத்த கூடாது. முகநூல் மூலம் வியாபாரம் செய்வது நல்லது தான் ஆனால் அதை உங்கள் பெர்சனல் அக்கவுண்ட் மூலம் செய்ய வேண்டாம். ஏனெனில் உங்கள் முகநூல் நண்பர்கள் எப்போதும் உங்கள் வியாபாரத்தை மட்டுமே பார்க்க விரும்ப மாட்டார்கள்.
செய்யக் கூடாதவை #2 : உங்கள் வீட்டுக் குழந்தைகள் அழகு தான் மிகவும் க்யூட் தான் அதற்காக எந்நேரமும் அவர்களின் புகைப்படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க கூடாது.!
செய்யக் கூடாதவை #3 : தேவையே இல்லாமல் பிற முகநூல் நண்பரை டேக் செய்வதே மிகவும் தவறு அதிலும் உங்களை பற்றிய முகஸ்துதி புகைப்படங்களில் இதர முகநூல் நண்பர்களை டேக் செய்வது கிட்டத்தட்ட 'பாவம்' ஆகும்.
செய்யக் கூடாதவை #4 : புத்திசாலித்தனமாக செய்கிறோம் என்று நினைத்து, உங்களைப் பற்றி தாழ்மையான தற்பெருமைகளை நீங்களே செய்து கொள்ள கூடாது..!
செய்யக் கூடாதவை #5 : முகநூலை ஏதோ உடனடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு கருவியாக நினைத்துக்கொண்டு எந்நேரமும், எதையுமே விடாமல் பதிவு செய்து கொண்டே இருக்க கூடாது.
செய்யக் கூடாதவை #6 : பிறர் குழந்தைகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி முகநூலில் போஸ்ட் செய்ய கூடாது.
செய்யக் கூடாதவை #7 : கேம் விளையாட்டு பிரியர்களுக்கு கேம் ரெக்குவஸ்ட் அனுப்பலாம் பரவாயில்லை, அதற்காக எல்லோரிடமும் அதையே செய்து தொல்லைக் கொடுக்க கூடாது.!
செய்யக் கூடாதவை #8 : உங்கள் முகநூல் நண்பர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக வாழைப்பழம் சாப்பிட்டேன், ஜிம் போனேன் போன்ற பதிவுகளை நிகழ்த்தக் கூடாது..!
செய்யக் கூடாதவை #9 : உங்கள் காதல் தோல்விக்கு யார் காரணம் என்ன காரணம் என்பதை தனியாக உட்கார்ந்து யோசிக்க வேண்டுமே தவிர முகநூலில் உங்கள் முன்னால் காதலை சாடி தள்ளக் கூடாது..!
செய்யக் கூடாதவை #10 : உங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்பதற்காக உங்கள் நண்பர்களின் பிரச்சனையைப்பற்றிய தகவல்களை முகநூலில் பதிவு செய்து விளம்பரப்படுத்தக்கூடாது.
செய்யக் கூடாதவை #11 : அனைத்து வகையான முகநூல் சமூக வலைதள அக்கவுன்ட்களையும் உங்கள் முகநூலில் இணைக்க கூடாது..!
செய்யக் கூடாதவை #12 : முகநூல் என்பது சமூக வலைதளம் தான். அதற்காக, எந்நேரமும் அரசியல் சார்ந்த விடயங்களைப்பற்றி கூச்சலிட்டுக் கொண்டிருக்க கூடாது..!
செய்யக் கூடாதவை #13 : முகநூல் நண்பர்களின் கவனத்தை திருடுவதற்காக எதையாவது செய்ய வேண்டுமே என்பதகாக எதையும் செய்யக்கூடாது..!
செய்யக் கூடாதவை #14 : முகநூலை சேவைகள் செய்வது சார்ந்த விடயங்களை அறிவிக்கும் ஒரு இடமாக பயன்படுத்தக் கூடாது..!