பொதுமக்கள் வசதிக்காக, ‘139’ அழைத்து ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் வசதியை ரயில்வேத்துறை அமல்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக, ‘139’ அழைத்து ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் வசதியை ரயில்வேத்துறை அமல்படுத்தி உள்ளது. ரயிலில் பயனம் செய்ய எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதால், டிக்கெட் ரத்து செய்யும் பயணிகளுக்கு அடிக்கடி பணம் மற்றும் கால விரயம் ஏற்பட்டது. இதை தடுப்பதற்காக ‘139’ என்ற எண்ணுக்கு அழைத்து டிக்கெட் ரத்து செய்யும் எளிய வசதியை கடந்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.

இந்த திட்டத்துக்கான பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, நேற்று முதல் இது பொதுமக்கள் வசதிக்காக அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''இந்த புதிய திட்டத்தின் படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் (கன்ஃபர்ம்) வைத்திருக்கும் பயணிகள், தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், ‘139’ என்ற எண்ணுக்கு போன் செய்து ரத்து செய்ய வேண்டிய டிக்கெட் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

அப்போது, அந்த பயணிக்கு ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ (ஓ.டி.பி.) வழங்கப்படும். பின்னர் அந்த பாஸ்வேர்டை ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் கொடுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெறலாம்.

இதைப்போல ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள், அந்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால் அந்த இணையதளத்தில் கொடுத்துள்ள வசதியை பயன்படுத்தியே ரத்து செய்து கொள்ளலாம். இந்த 2 முறைகள் மூலம் டிக்கெட் ரத்து முறையில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது" என்றார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி