ஆதார் எண் மூலம் உர மானியம் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்

ஆதார் அடையாள திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதா நிறைவேறிய மறுதினமே, விரைவில் உர மானியமும் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலா ளர் சக்திகாந்த தாஸ் பேசும் போது, “ஆதார் எண் பயன் படுத்துவதால் நிர்வாகத் திறன் மேம்படும். அந்த வகையில், உணவுப்பொருள் மற்றும் உரத் துக்கான மானியங்களையும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும். அதேநேரம் பயனாளிகளுக்கு எவ் வித பாதிப்பும் ஏற்படாத வகையில் படிப்படியாக இந்த முறை செயல்படுத்தப்படும்” என்றார்.

ஆதார் எண் அடிப்படையில் சமையல் எரிவாயு மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், மானியம் உரியவர்களை நேரடியாக சென்றடைவதால் முறைகேடுகளை தடுக்க முடியும் என அரசு கருதுகிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி