நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது: யுபிஎஸ்சி அறிவிப்பு:

நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது: யுபிஎஸ்சி அறிவிப்பு:

மத்திய குடிமைப் பணியிடங்களுக் கான (யுபிஎஸ்சி) முதன்மைத் தேர்வில் பங்கேற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப்பணி, வெளி யுறவுப் பணி, காவல் பணி உட்பட பல்வேறு குடிமைப் பணியிடங் களுக்கு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர் காணல் ஆகிய 3 நிலைகளில் தேர்வு கள் நடத்தப்படுகின்றன. இதில் முதன்மைத் தேர்வுகள் முடிந்த நிலையில் நேர்காணல் மார்ச் 8-ம் தேதி நடக்க உள்ளது.இது குறித்து யுபிஎஸ்சி வெளி யிட்ட அறிக்கை:

முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக் கான அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. விண்ணப் பங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஒரு வேளை தரவிறக்கம் செய்ய முடியாத பட்சத்தில், நேர்முகத் தேர்வு நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாக யுபிஎஸ்சியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி