உலகின் அதிகமான தமிழ் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழகராதியை உங்கள் ஆண்டிராய்டு ஸ்மார்ட் பேசியில் நிறுவ ஆசையா?
நீங்கள் பயன்படுத்திப்பார்க்க, நான் பயன்படுத்தி பார்த்த ஒரு மென்பொருளோடு உங்களை சந்திக்கிறேன்.
3 லட்சம் தமிழ் வார்த்தைகளை கொண்ட தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ்
தனித்தமிழ் களஞ்சியம் 2.6-ஐ இசையினி என்கிற குழுமம் இலவச பதிப்பாக
வெளியிட்டுள்ளது.
நேற்றுதான் இது பற்றி படித்து 14 MB கொண்ட இந்த அகராதியை தரவிறக்கி
பயன்படுத்திப்பார்த்தேன். தரமாக உள்ளது.
இலவசமாக வழங்கினாலும் விளம்பரங்கள் எதுவும் இடையில் வரவில்லை.
மென்பொருளை நிறுவும்போது நம் இருப்பிடம், கான்டக்ட், கேமரா என நம்
ப்ரைவஸி எதையும் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்கவில்லை.
மிக எழிமையாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் இதன் உள்ளாக்கம் இருக்கிறது.
இதனை திறந்தவுடன் சர்ச் [search] என்பதை தட்டி நாம் பார்க்கவிரும்பும்
வாக்கியத்தை தட்ட ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு எழுத்தாக தட்ட தட்ட அதுதொடர்பான வார்த்தைகள் மேளே காட்டப்படும்.
நமக்கு வேண்டிய வார்த்தையை தேர்வுசெய்து அர்த்தத்தை பார்த்துக்கொள்ளலாம்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை:
நீங்கள் தரவிறக்கப்போகும் கோப்பு ஜிப் [zip] ஆக இருக்கும்.
ஃபைல்மேனேஜர் உதவியுடன் அதனை எக்ஸ்ட்ராக்ட் செய்தால் உள்ளே ஒரு pdf-உம்,
அகராதிக்கான அப்லிகேஷன் ஃபைலும் இருக்கும். அப்லிகேஷனை நிறுவி குறைந்தது 45 நிமிடத்திற்கு அதனை நீங்கள் பயன்படுத்த முடியாது.
இந்த 45 நிமிடம்வரை உங்கள் ஃபோன் ஸ்லீப் மோடுக்கு அதாவது ஸ்கிரீனை ஆஃப் ஆகாமல் பாத்துக்கனும்.
இதற்காக settings/display கு சென்று ஸ்கிரீன் டைம் ஔட் என்பதில் ஸ்கிரீன் ஆஃப் ஆகும் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்.
மற்றபடி இணையம், கால் என வழக்கம்போல உங்க ஃபோன பயன்படுத்திக்கலாம் பிரச்சனை இல்ல.
இந்த 45 நிமிடம் அப்லிகேஷன் 3 லட்சம் வார்த்தைகளையும் அகர வரிசைப்படுத்த எடுத்துக்கொள்ளும் நேரம்.
மென்பொருளை உருவாக்கியவர்கள் 45 நிமிடங்கள் ஆகும்னு சொல்லியிருக்காங்க.
ஆனா நேற்று என்னோட எக்ஸ்பீரியா [T2 ultra] 1GB ரேம் கொண்ட ஃபோன்ல இந்த
ப்ராசெஸ் முடிய ஒருமணி நேரத்துக்கு மேலையே ஆச்சு.
settings/appsல இந்த தனித்தமிழ் களஞ்சியம் மென்பொருளுக்கான ஸ்டோரேஜ் 116
MB காட்டுனாதான் நாம் பயன்படுத்த தயாராயிருச்சின்னு அர்த்தம்.
அதுவர வெயிட் பண்ணனும்.
512 MB RAM, அல்லது குறைவான ஃபோன் மெமரி உள்ள ஃப்ோன்ல இத பயன்படுத்தவேண்டாம்.
இதுபற்றி கூடுதலா தெரிஞ்சிக்க:
https://pitchaimuthu.wordpress.com/2016/01/25/thanithamizhakarathi-3/
தரவிறக்க:
https://drive.google.com/file/d/0B9p6_g6cWkIlZEptcUZsU05hYjA/view?usp=docslist_api