பாலிடெக்னிக் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.

வேலை வாய்ப்பை அதிகரிக்க பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. 

தொழில்நுட்ப கல்வி இயக்குனரக சுற்றறிக்கை: தமிழகத்தில் 41 அரசு பாலிடெக்னிக், 34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் உள்பட 490க்கும் அதிகமான பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. பாலிடெக்னிக் பாடத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும். கடந்தாண்டு முதலாமாண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் இந்த புதிய பாடத்திட்டத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள், தொழில் நுட்ப வளர்ச்சிகள்,உலகளவில் பிரபலமாகி வரும் நானோ டெக்னாலஜி, ரோபாடிக்ஸ் குறித்தும் புதிய பாடத்திட்டத்தில் பாடங்கள் சேர்க்கப்பட்டன. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக மாற்றவும் இந்த புதிய பாடத்திட்டம் வகை செய்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி