உங்கள் கம்ப்யூட்டரைவைரஸ்தாக்கிவிட்டது என்பதனைஎப்படி அறிந்து கொள்வது?

உங்கள் கம்ப்யூட்டரைவைரஸ்தாக்கிவிட்டது என்பதனைஎப்படி அறிந்து கொள்வது?

ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர்வைரஸின் பிடிக்குள்வந்தவுடன்,செயல் இழக்காது. படிப்படியாககம்ப்யூட்டரின்செயல்பாடுகள்முடக்கப்படும். நம் தனிப்பட்டதகவல்கள்திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திடஇயலாதநிலை ஏற்பட்டுவிடும்.
நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டிவைரஸ் புரோகிராம் உள்ளதே? பின்எப்படி வைரஸ்தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கைதரமுடியாது. எந்தவளையத்தை உடைத்துக்கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் எனயாரும்கணித்துச்சொல்லமுடியவில்லை. எனவே, நாம்தான் விழிப்பாகஇருந்து,வைரஸ்தாக்கியஅறிகுறிகள்தெரிந்தால், உடனே சிலபாதுகாப்பு நடவடிக்கைகளைஎடுக்கவேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள்என்ன; அவை தெரிந்தால்என்னசெய்திடவேண்டும் என்பதனைஇங்குகாணலாம்.
இப்போது நாம்பயன்படுத்தும்ஆண்ட்டிமால்வேர்புரோகிராம்களும் இதனையேசெய்கின்றன. நம் சிஸ்டம்வழக்கத்திற்குமாறான வழிகளில் செயல்படுகிறதாஎன்பதனைக்கண்காணிக்கின்றன. இந்தசெயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristicsஎன அழைக்கப்படுகின்றன. முற்றிலும்மாறான இயக்க வழிகள்தென்படுகையில், இந்தஆண்ட்டிமால்வேர்புரோகிராம்கள்இயங்கி,புதிதாகவந்திருக்கும் மால்வேர்புரோகிராமின் தன்மை,செயல்பாடுஆகியவற்றைக் கண்டறிந்துநமக்கு தகவல் தருகின்றன.
இவை பாதுகாப்பு வழிகளைஎப்படிதகர்த்தனஎன்று அறிந்து, அதற்கானபுதியபாதுகாப்பு வளையங்கள் பேட்ச்பைல் என்றபெயரில்நமக்குத்தரப்படுகின்றன. இந்தவழக்கத்திற்கு மாறானஇயக்கசெயல்பாடுகளே, நமக்கு நம்கம்ப்யூட்டரில் மால்வேர்அல்லதுவைரஸ்புரோகிராம்கள் இயங்கத்தொடங்கியுள்ளன என்பதற்கானஅறிகுறிகள். அவற்றைப் பார்க்கலாம்.
போலியான ஆண்ட்டிவைரஸ்தகவல்கள்:
திடீரென நம் கம்ப்யூட்டரில்வைரஸ்தாக்கம்இருப்பதாகவும், உடனடியாககம்ப்யூட்டர் முழுமையும்ஸ்கேன்செய்யப்பட வேண்டும்எனபிரபலமானஆண்ட்டிவைரஸ்புரோகிராம்கள், அல்லது நாம்பயன்படுத்தும் ஆண்ட்டிவைரஸ்புரோகிராம்களின்நிறுவனங்கள்பெயரில் நமக்கு அஞ்சலில்செய்திகள்வரும். ஸ்கேன்செய்திடநம்மைத்தூண்டி, தயாராகயெஸ்பட்டன்ஒன்று தரப்படும். இதில்கிளிக்செய்தால், கம்ப்யூட்டர்ஸ்கேன்செய்யப்படுகிறதுஎன்ற போர்வையில்,வைரஸ் அல்லதுமால்வேர்புரோகிராம்தன் முழுசெயல்பாட்டினைமேற்கொண்டு, கம்ப்யூட்டரைமுடக்கிவிடும். அல்லது,கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள்பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு,இவற்றை நீக்க, இன்னொருஆண்ட்டிவைரஸ்புரோகிராமினை வாங்கிக்கொள்ளுங்கள்.
விலை மலிவு தான்எனக் கூறி, அதனைவாங்கிடநீங்கள் சம்மதிக்கும்நிலையில்,உங்கள்கிரெடிட் கார்ட், வங்கிஅக்கவுண்ட்எண்ஆகியவற்றைவாங்கிக் கொள்ளும்.பின் புதியவைரஸ்புரோகிராம்பதியப்பட்டுள்ளதாகவும்,வைரஸ்கள்அனைத்தும்நீக்கப்பட்டுவிட்டதாகவும்காட்டப்படும். ஆனால், உங்களிடம்இருந்துபெறப்பட்ட வங்கிமற்றும்கிரெடிட்கார்ட்பதிவுகளைப்பயன்படுத்தி, உங்கள்பணம் திருடப்படும். சிலநாட்கள்இடைவெளியில்தான், பொதுவாக,நாம்வங்கிக்கணக்கினைப்பயன்படுத்துவதால்,இந்த மோசடியைநாம் அறியும்போது,நம் பணம்மொத்தமாகத்திருடப்பட்டிருக்கும்.
இவ்வாறு நமக்குப்போலியானசெய்திகள்காட்டப்பட்டால், உடனேகம்ப்யூட்டரில்செயல்பட்டுக்கொண்டிருக்கும் நம் பைல்களைசேவ்செய்து, இயக்கத்தைநிறுத்தி,மின்சக்தியையும்நிறுத்தவும். அடுத்து,கம்ப்யூட்டரை சேப் மோடில்இயக்கவும்.நெட்வொர்க் மற்றும் இணையஇணைப்பினைநீக்கவும். அடுத்து,அண்மையில் நீங்கள்இன்ஸ்டால்செய்த புரோகிராம்அல்லதுபுரோகிராம்களைஉடனடியாகஅன்இன்ஸ்டால் செய்திடவும்.அவற்றின் வழியாகத்தான்இந்தமால்வேர்அல்லது வைரஸ்புரோகிராம்கம்ப்யூட்டருக்குள் நுழைந்திருக்கும்.இந்த புதியபுரோகிராம்களை நீக்கியபின்னர், கம்ப்யூட்டரைரெஸ்டோர்பாய்ண்ட்ஒன்றுக்குக்கொண்டுசென்றுஇயக்கவும்.
ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்தபுதியபுரோகிராம்களை இன்ஸ்டால்செய்த நாளுக்கு முன்பிருந்தால்நல்லது.ரெஸ்டோர்செய்த பின்னர், வழக்கம்போலகம்ப்யூட்டரை இயக்கி, நீங்கள்பயன்படுத்தும் ஆண்ட்டிவைரஸ்புரோகிராம்மூலம்,கம்ப்யூட்டரைஸ்கேன் செய்திடவும்.மால்வேர் புரோகிராமின்மிச்ச மீதநச்சுநடவடிக்கைகளுக்கானபைல்கள்இருப்பின்அவை கண்டறியப்படும்.அவற்றை நாம்அழித்துவிடலாம்.
தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்:
நம் பிரவுசரில் திடீரெனநாம்இன்ஸ்டால்செய்திடாமலேயே, புதியடூல்பார்கள் காட்சி அளிக்கும். நாம்“இதுஎப்படி வந்தது?” என்றஎண்ணத்துடன், அவற்றைஅலட்சியப்படுத்தித்தொடர்ந்துசெயல்படுவோம். இந்த டூல்பார்கள்,நல்லதொருநிறுவனத்தின்உண்மையான புரோகிராம் என்பதைஉங்களால்உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்றால், அதுஉங்களுக்குத்தேவை எனில், தொடர்ந்துவைத்துக்கொண்டு பயன்படுத்தவும்.இல்லை எனில், அதனை உடனடியாக,முழுமையாக நீக்குவதேநல்லது.
ஏனென்றால், இதுவும்மால்வேர்புரோகிராமின் ஒருஅவதாரமாகவே இருக்கும்.பொதுவாக, டூல்பார்களை நீக்கஅனைத்து பிரவுசர்களும்வழிகளைக்கொண்டுள்ளன. அவற்றைஇயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்டடூல்பார்களில்இது இருந்தால், உடனடியாகநீக்கவும். ஆனால், பட்டியலில்இதுஇல்லைஎன்றால், நிச்சயம்இதுமால்வேர்என்பது உறுதியாகிறது. மற்றவழிகள்மூலம் இதனைநீக்கலாம்.
இணையத்தில் மாற்று வழிசெல்லத்தூண்டுதல்:
பல வேளைகளில், இணையத்தில்நாம்இயங்கிக்கொண்டிருக்கையில், வேறுஒருஇணையதளம் செல்லுமாறுநாம்தூண்டப்படுவோம். கம்ப்யூட்டரைஹேக் செய்திடுபவர்கள் பலர்இதனைத்தங்கள்வாழ்வாதாரமாகக்கொண்டுள்ளனர்.இவ்வாறு மாற்றுவழிப் படுத்தி,குறிப்பிட்டஇணையதளத்தைப்பார்ப்பதற்காக நாம்ஏற்படுத்தும் ஒவ்வொருகிளிக்செயல்பாட்டிற்கும்,அவர்களுக்குப் பணம்கிடைக்கும். இதுபோன்ற நிகழ்வுகளும்,போலியானடூல்பார்களால்மேற்கொள்ளப்படும். எனவே மேலேசொன்னவழிகளைப் பின்பற்றிஇந்தடூல்பார்களை நீக்கவும்.
பாப் அப் செய்திகள்:
சில இணையதளங்களைப்பார்வையிடுகையில், திடீர்திடீரெனஏதேனும் பாப்அப்செய்திக்கட்டங்கள் காட்டப்பட்டு,அதில் தரப்படும்தகவல்கள், நம்மைசிலலிங்க்குகளில்கிளிக் செய்திடக்கேட்டுக்கொள்ளும். சர்வே எடுப்பதாக்க்கூறிக்கொண்டு, நம்மைப் பற்றியதனிநபர்தகவல்களைகேட்டு வாங்கும்.சர்வேயில் கலந்துகொண்டால்,ஆப்பிள்ஐபோன் கிடைக்கும்வாய்ப்புஉண்டுஎன்று நமக்குஆசை காட்டும்.இது போன்றசெய்திகளைஉருவாக்கித்தருவதும் சிலடூல்பார்களே.எனவே, மேலே காட்டியுள்ளபடி,இந்தபுதிய டூல்பார்களைநீக்குவதே,இதிலிருந்து தப்பிக்கும் வழியாகும்.
உங்கள் மின் அஞ்சல்முகவரியிலிருந்து,உங்கள் நண்பர்கள்அனைவருக்கும்அஞ்சல் செல்லும். அதில்தான்வெளிநாடு வந்திருப்பதாகவும்,பணம் முழுவதையும்தொலைத்துவிட்டுதிண்டாடிக்கொண்டிருப்பதாகவும் செய்திஇருக்கும். அந்தநாட்டு வங்கிக்கணக்குஒன்றுதரப்பட்டு, அதில் பணம்செலுத்தி உதவும்படிதகவல் தரப்படும்.இப்படிப்பட்ட அஞ்சல்கள்அனுப்பப்பட்டால், உங்கள்கம்ப்யூட்டரின்கட்டுப்பாடு, வைரஸ்வசம் சென்றுவிட்டது என்றுஉறுதியாகக்கூறலாம். சில வேளைகளில்,இத்தகையஅஞ்சல்களில்,அனுப்பியவரின் பெயராக உங்கள்பெயர்இருக்கும். ஆனால், அனுப்பியஅஞ்சல் முகவரிஉங்களுடையதாகஇருக்காது. அதனைப் பார்த்து நாம்இதுபோலிஎன அறிந்துகொள்ளலாம்.அவ்வகையில், அஞ்சல் முகவரிவேறாகஇருந்தால், உங்கள் கம்ப்யூட்டர்பாதிக்கப்படவில்லை;
ஆனால், அஞ்சல்முகவரிகள்திருடப்பட்டுப்பயன்படுத்தப்படுகின்றனஎன்றுஉணர்ந்து கொள்ளலாம். உங்கள்நண்பர்கள்நிச்சயம்அஞ்சல்வழியாகவோ,அல்லதுதொலைபேசிவழியாகவோதொடர்பு கொண்டு, இதுகுறித்துக்கூறுவார்கள். உடனேவிழித்துக் கொண்டு,உங்கள்கம்ப்யூட்டரை முழுமையாகஸ்கேன் செய்திடவும்.தேவையற்றஇன்ஸ்டால்செய்யப்பட்டபுரோகிராம்களைஅழிக்கவும். டூல்பார்களையும்நீக்கவும்.
இணைய பாஸ்வேர்ட் மாற்றம்:
இணைய இணைப்பிற்குமற்றும்சிலஇணைய தளங்களுக்குநாம்பயன்படுத்தும்பாஸ்வேர்ட்கள்திடீரென மாற்றப்பட்டிருக்கும். நம்மால்,இந்தசேவை எதனையும்பயன்படுத்தமுடியாது. இது எப்போது நடக்கும்?இதற்குக் காரணம்நீங்களாகத்தான்இருப்பீர்கள். உங்களுக்கு இந்தசேவையைவழங்கும்நிறுவனத்தின்பெயரில்உங்களுக்குஅஞ்சல்ஒன்றுவந்திருக்கும். அதில், அனைத்துசந்தாதார ர்களின்பதிவுகள்அனைத்தும்புதுப்பிக்கப் படுவதாகவும்,அதற்காக உங்களுடைய யூசர்நேம்மற்றும்பாஸ்வேர்ட்களைத் தரவும்என்று கேட்கப்படும்.
அதனை உண்மை எனநம்பி,நீங்களும்தந்திடுவீர்கள். இவற்றைப்பெற்ற அந்த தீயவர்கள், உங்கள்இணையசேவைமற்றும்தளங்களுக்கானபாஸ்வேர்ட்களை முற்றிலுமாக மாற்றி,உங்களைஅலைக்கழிப்பார்கள்.அல்லது குறிப்பிட்டவங்கிக்கணக்கில்பணம் செலுத்தும்படிகேட்டுக்கொள்வார்கள். நீங்கள்பணம்செலுத்தியவுடன், பணத்தைஎடுத்துக் கொண்டு, வங்கிக்கணக்கைத்தொடராமல்விட்டுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்,நீங்கள்தொடர்பு கொள்ளும்நண்பர்கள்அனைவருக்கும், உங்கள்இணையசேவைபாதிக்கப்பட்டிருப்பதனைஅறிவிக்கவும்.ஏனென்றால், அவர்களுக்கு உங்கள்யூசர்அக்கவுண்ட்டிலிருந்து போலியானதகவல்கள்அனுப்பப்படலாம். அடுத்து,உங்களுக்கு இணைய சேவைவழங்கும்நிறுவனத்திடம், உங்கள்அக்கவுண்ட்முடக்கப்பட்டிருப்பதனைஅறிவித்து, அதனைமுடக்கி,பின்மீண்டும் நீங்கள்பயன்படுத்தும்வகையில் யூசர் நேம்மற்றும்பாஸ்வேர்டினைப் புதியதாகஅமைக்கும் வசதியைக்கேட்டுப்பெறவும்.
பெரும்பாலான இணையசேவைநிறுவனங்கள் இது போன்றஅவசர உதவியைபோர்க்காலஅடிப்படையில்மேற்கொண்டு, நமக்குஉதவும். பொதுவாக, இணையதளங்கள்இதுபோன்ற தகவல்களைக்கேட்டுப்பெறுவதில்லை. எனவே, யூசர்நேம்மற்றும்பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால்,அந்த தளத்தினை, அஞ்சலில்தரப்பட்டலிங்க்வழி அணுகாமல், நேரடியாகஇணையம்வழி அணுகி, அப்படிப்பட்டதகவல் தரப்பட்டுள்ளதா என்பதனைஉறுதிப்படுத்திக்கொள்ளவும்.
மவுஸ் பாய்ண்ட்டர்தானாகச்செயல்படுதல்:
சில ஆப்ஷன்களைத்தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில்,உங்கள் மவுஸ்பாய்ண்ட்டர் தானாகநகர்ந்து சென்று, சிலஆப்ஷன்களைத்தேர்ந்தெடுக்கும் வகையில்செயல்பட்டால், நீங்கள்வைரஸ்புரோகிராமினால்மாட்டிக்கொண்டீர்கள்என்பது உறுதியாகிறது.பொதுவாக ஹார்ட்வேர்பிரச்னைஏற்பட்டால், மவுஸ்தாறுமாறாகச்செயல்படும். ஆனால்,இவ்வாறு ஆப்ஷன்ஒன்றினைத்தேர்ந்தெடுக்கும் வகையில்செயல்பட்டால், அது நிச்சயம்வைரஸ்புரோகிராமின்வேலையாகத்தான்இருக்கும்.
இவை பெரும்பாலும்,சிலபுரோகிராம்களையே இன்ஸ்டால்செய்திடும். நாம்கம்ப்யூட்டரைப்பயன்படுத்தாமல்விட்டு வைத்திருக்கையில், அதனைஇயக்கும். அப்படிப்பட்ட ஒருநிகழ்வைப் பார்க்க நேர்ந்தால்,கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்றுகண்காணிக்கவும். பின்னர்,ரெஸ்டோர்வழியில் சென்று,கம்ப்யூட்டரைச் சரிப்படுத்தவும்.அதற்கு முன்பாக,இன்னொருகம்ப்யூட்டர் மூலம், உங்கள்அனைத்து யூசர்நேம்மற்றும்பாஸ்வேர்ட்களைமாற்றவும். நிதிஇழப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாககாவல் துறைக்குத் தெரியப்படுத்தி,சைபர் கிரைம்பிரிவு வழியாகத்தீர்வுகாணவும். வங்கிக் கணக்கின்இணையசேவையினைநிறுத்தி வைக்குமாறு,வங்கிக்கு கடிதம்தரவும்.
எதிர்பாராத சாப்ட்வேர் பதிவு:
கம்ப்யூட்டரில் நாம்எதிர்பாராதநிலையில் புதியசாப்ட்வேர்தொகுப்பு ஒன்று பதியப்பட்டுள்ளதாகத்தெரிகிறதா? நிச்சயமாக, அதுவைரஸ்புரோகிராமின்வேலையாகத்தான் இருக்கும். அல்லது,நீங்கள்பதிந்த புரோகிராம்நிறுவனமே,இதுபோன்ற வேவுபார்க்கும்புரோகிராமினை பதிந்து வைக்கும்.நீங்கள்பயன்படுத்திய முதல்புரோகிராமினைப் பதிகையில்தரப்படும்நிபந்தனைகளில், இதுபோன்ற தேவைப்படும்புரோகிராமினைக்கம்ப்யூட்டரில்பதிவதற்கான அனுமதியை, நீங்கள்அறியாமலேயேபெற்றிருக்கும்.
செயல் இழக்கும் ரெஜிஸ்ட்ரிஎடிட்டர்,டாஸ்க்மானேஜர்:
நம் கம்ப்யூட்டரில்இயங்கும்ஆண்ட்டிவைரஸ் புரோகிராம்,ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர்ஆகியவற்றைநாம் அணுகமுடியாமல்உள்ளதா? அல்லது அவைசெயல்இழந்துஉள்ளனவா? நிச்சயமாக,கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டினைவிட்டுப் போய்விட்டது. உடனடியாக,கம்ப்யூட்டரைசேப் மோடில்இயக்கி,மேலேதரப்பட்டுள்ள அனைத்துவழிகளையும் மேற்கொள்ளவும்.பின்னர், ரெஸ்டோர்வழியாகக்கம்ப்யூட்டரை முந்தையநாள் ஒன்றுக்குக் கொண்டுசெல்லவும்.இதனை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
வங்கிக் கணக்கில் பணம்குறைகிறது:
நிச்சயமாய் நம் இணையவழிவங்கிசேவையினைப் பயன்படுத்தி,ஹேக்கர் செய்திடும் வேலைதான் இது.பெரும்பாலும், நம் அக்கவுண்ட்டில்உள்ள அனைத்தும்காலிசெய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டுவங்கி மூலம், அந்நாட்டுக்கரன்சிக்குமாற்றி உங்கள்பணம்எடுக்கப்பட்டிருக்கும். உடனடியாக,வங்கி, காவல் துறைக்குஇதனைத்தெரியப்படுத்தி, உடனடிநடவடிக்கைக்குக்கேட்டுக்கொள்ளவேண்டும். சிலவங்கிகள்,இதுபோன்ற நிகழ்வுகளில், நமக்குஇழப்பீடுதரும் வகையில்பாதுகாப்புதிட்டங்களை மேற்கொண்டிருக்கும்.இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கைதேவை.
இணையக் கடைகளிலிருந்துகுற்றச்சாட்டு:
சில வர்த்தக் இணையதளநிறுவன்ங்களிடமிருந்துநீங்கள்வாங்கியபொருட்களுக்கு ஏன் இன்னும்பணம் செலுத்தவில்லை; தவணைப்பணம்செலுத்தவில்லை என அஞ்சல்மற்றும் கடிதங்கள்வரும். நிச்சயமாய்,உங்கள் கம்ப்யூட்டர்கைப்படுத்தப்பட்டு,அதன் மூலம், மிகப் பெரியஅளவில்பொருட்கள்வாங்கப்பட்டு, அவைஉங்கள் வீட்டுமுகவரிக்குஅனுப்பப்படாமல், வேறுஒரு முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்கும்.இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறஒருசெயலாகஇருக்கும். முதலில், இணையதள நிறுவனத்தில்நம்பிக்கையைஉருவாக்கி, பின்னர், மொத்தமாகநம்அக்கவுண்ட்டில் பொருட்களைவாங்கி இருப்பார்கள்.
சில இணைய தளங்கள், தவணைமுறையிலும்பொருட்களைfத் தருவதால்,இந்த ஏமாற்று வேலை, திருடர்களுக்குஎளிதாகிறது. இது தெரிந்தவுடன்,உடனடியாகவங்கி இணையசேவையின்யூசர்நேம் மற்றும்பாஸ்வேர்டினைமாற்றவும். வங்கி, காவல்துறைக்குதெரியப்படுத்தி, நடவடிக்கைஎடுக்கச்சொல்லவும். மேலேசொல்லப்பட்ட திருட்டுநடவடிக்கைகள்மூன்றுகட்டமைப்புகள்மூலமாகமேற்கொள்ளப்படுகின்றன. அவை,சரிசெய்யப்படாத பிழைக் குறியீடுகள்கொண்ட சாப்ட்வேர்புரோகிராம்,ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ்புரோகிராமினைஇயக்குதல்மற்றும்திருட்டு மின் அஞ்சல்களுக்குஉடன்பட்டு செயல்படுதல் ஆகும்.
இந்த மூன்று விஷயத்திலும்நாம்சற்றுக்கவனமாக இருந்தால், நம்கம்ப்யூட்டர்முடக்கப்படுவதனை, நம்பணம் திருடப்படுவதனைத்தடுக்கலாம். நமக்கு இதெல்லாம்நடக்காது என்றுமெத்தனமாகஇல்லாமல்,தொடர்ந்துவிழிப்புடன் இருப்பதே,இத்தகைய நிலைகளைத் தடுக்கக்கூடியவழிகளாகும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி