வங்கி பணிக்காக காத்திருப்போர் விரைந்து விண்ணப்பித்திடுங்கள்!

அனைவராலும் நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் கிரேடு 'ஏ' மற்றும் 'பி' பணியிடங்களான உதவி மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர்கள் (கிரேடு 'ஏ')
காலியிடங்கள்: 100
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேலாளர் (கிரேடு 'பி')
காலியிடங்கள்: 15
வயது வரம்பு:25 - 35க்குள் இருக்க வேண்டும். SC, ST, OBC, PWD, முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:விவசாயம், கால்நடை அறிவியல், கால்நடை கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால் தொழில்நுட்பம், தோட்டக்கலை போன்ற பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் சிஏ, ஏசிஎஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை:தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கு ரூ.650 100 = 750, கிரேடு 'பி' பணியிடங்களுக்கு ரூ.750 100 = ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். SC, ST, PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.04.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016


மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.nabard.org/pdf/AM_RDBS_MANAGER_RDBS_ENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி