தமிழ் கலாசாரம் தான் கைகொடுத்தது: கனடா நீதிபதி வள்ளியம்மை பெருமிதம்


காரைக்குடி: ''தமிழகத்தில் பிறந்து பல்கலையில் படிக்கும் சில மாணவர்களுக்கு தமிழ் தெரியாது என்பது வேதனை அளிக்கிறது,'' என கனடா நீதிபதி வள்ளியம்மை பேசினார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நீதிபதியாக நியமிக்கப்படிருப்பவர் வள்ளியம்மை. காரைக்குடி அருகே கோணாப்பட்டு, இவரது சொந்த ஊர். கனடாவில் தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் நீதிபதி இவர். காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில்இவருக்கு பாராட்டு விழாநடந்தது.இதில்,

தேசிய பசுமை தீர்ப்பாய முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம் பேசியதாவது:நீதியை கண்டுபிடித்து அதை நிலை நாட்டுவதுதான் வழக்கறிஞர் பணி. நீதி என்பது சட்டத்தின் வழி மட்டுமன்றி, தர்மத்தின் வழியும் இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பை சொன்னால், உச்சநீதிமன்றத்தில் அதற்கு எதிர்ப்பு இருக்காதவாறு, நீதியை நிலை நாட்ட வேண்டும். நீதியில் அசைவு இருக்க கூடாது, என்றார்.

நீதிபதி வள்ளியம்மை பேசியதாவது:
தான், தன் குடும்பம் என்றில்லாமல் சமுதாய சிந்தனை வேண்டும். அர்ப்பணிப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒழுக்கம் இல்லை என்றால் எதுவும் கிடைக்காது. ஒவ்வொருவரும் அவருடைய சொந்த முயற்சியால்தான் முன்னேற முடியும். நீதித்துறையில் சுதந்திரம் வேண்டும். யாருடைய தலையீடும் இருக்கக்கூடாது. வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் நம்முடைய கலாசாரம்தான் எனக்கு உதவியது.புத்தகம் படிப்பதில் உள்ள நன்மை வேறு எதிலும் இல்லை; படிப்பை மீறிய சக்தி கிடையாது. வரும் காலங்களில் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன். மாணவர்கள் தற்கொலை அதிகமாக நடக்கிறது. பெற்றோர் குழந்தைகளை புரிந்து, அதற்கேற்ப கல்வி அளிக்க வேண்டும். அவர்களிடம் கல்வியை திணிக்கக் கூடாது.தமிழத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோர்ட், ஷூ, டை, அணிவித்து அனுப்புகிறோம். இது ஆங்கில கலாசாரம். தமிழ் போன்ற அழகான மொழி கிடையாது. இங்குள்ள பல்கலை மாணவர்களில் சிலருக்கு, தமிழ் சரியாக தெரியாது என்பது வேதனை அளிக்கிறது.கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் பிரிவினை இருக்காது. தமிழகத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகளவில் வருகின்றன. புரிதல் இல்லாததே இதற்கு காரணம், என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி