கட்டாயம் மக்கள் கேள்விக்கு மந்திரிகள் பதிலளிப்பது... மத்திய தகவல் கமிஷன் அதிரடி தீர்ப்பு

மத்திய, மாநில அமைச்சர்கள், 'பொது அதிகாரிகள்' என்பதால், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், பொதுமக்கள் அனுப்பும் கேள்விகளுக்கு, அவர்கள் பதிலளிக்க வேண்டும்' என, மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்து உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், அகமத் நகரைச் சேர்ந்த ஹேமந்த் தாகே என்பவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.12 பக்க தீர்ப்பு:

அதில், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் ஆகியோர், பொதுமக்களை சந்திப்பதற்கு ஒதுக்கியுள்ள நேரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சகம், 'இது பற்றி அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்; அவரிடம் நேரம் பெற்றுக் கொள்ள வேண்டும்' என, தெரிவித்தது.

இதை எதிர்த்து, ஹேமந்த் தாகே தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு பிறப்பித்த, 12 பக்க தீர்ப்பு:

*மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், பொது அதிகார அமைப்பு. அத்துறையின் அமைச்சர், பொதுமக்களை சந்திக்கும் நேரம் குறித்த கேள்விக்கு, அமைச்சரிடமே பதில் கேட்கும்படி கூறியது முறையற்றது

*குடிமக்கள், தங்கள் அமைச்சரை சந்திக்க வேண்டிய நேரம் குறித்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்ப வேண்டிய மோசமான நிலை உள்ளது


*அமைச்சர், பொதுமக்களை எப்போது சந்திப்பார் என்ற விவரங்களை, சம்பந்தப்பட்ட அமைச்சர்களே, தாங்களாக முன்வந்து வழங்க வேண்டும்

*மக்களை சந்திக்க என, தனியாக நேரம்எதுவும் ஒதுக்கும் வசதி இல்லாவிட்டால், அதையும் அமைச்சர் அலுவலகம் அறிவிக்க வேண்டும்

*மக்களை சந்திக்கும் விஷயத்தை, அமைச்சரின் முடிவுக்கு விட்டு விடுவதை விட, அதை கட்டாயமாக்கி, வெளிப்படையான சட்டம் இயற்ற வேண்டும்

*அமைச்சர்கள், அரசியல் சாசனத்தின் கீழ், தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதால், அவர்கள் பொது அதிகாரிகள். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை, அரசு அதிகாரிகளாக அறிவித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.உத்தரவு:*அமைச்சர் பதவி என்பது, அரசியல் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட பதவி. அதனால், பொதுமக்கள் அனுப்பும் கேள்விகளுக்கு, அவர்கள், பொது தகவல் அதிகாரிகள் மூலம் பதில் சொல்லியே ஆக வேண்டும் 

*பொதுமக்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க, ஒவ்வொரு அமைச்சருக்கும் ஆதரவாக, தனி பொது தகவல் அதிகாரியை, மத்திய, மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்

*இந்தஉத்தரவை, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.
ரகசிய காப்புபிரமாணத்தை மாத்துங்க!


மத்திய தகவல் கமிஷனர் பிறப்பித்த தீர்ப்பு: அமைச்சர்கள் பதவியேற்கும் போது, ரகசிய காப்புப் பிரமாணத்தை படித்து உறுதி எடுக்கின்றனர். தற்போது, தகவல் யுகத்தில் இருக்கிறோம்; அதனால், ரகசிய காப்பு என்பதற்கு அர்த்தமே இல்லை. எனவே, அமைச்சர்கள் பதவியேற்கும் போது, ரகசிய காப்புப் பிரமாணத்துக்கு பதிலாக, வெளிப்படைத்தன்மை உறுதிமொழி ஏற்பாக மாற்ற வேண்டும் என, தேசிய அரசியல் சாசன மறு ஆய்வு கமிஷன், நிர்வாக சீர்திருத்த கமிஷன் ஆகியவை பரிந்துரைத்துள்ளன. அவற்றை அமல்படுத்த வேண்டும். அப்போது, தகவல் உரிமை சட்டத்தை அமைச்சர்கள் மதிக்கும் நிலை வரும். சட்டத்தில் விலக்களிக்கப்பட்ட விவரங்களை, இவர்கள் வழங்க வேண்டியதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி