வாட்ஸ்ஆப் அம்சம் : இது புதுசு நீங்கள் கவனித்தீர்களா.

உலகம் முழுவதும் அறியப்படும் வாட்ஸ்ஆப் செயலி தற்பொழுது பல வித அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்ஸ்ஆப்பை ஃபேஸ்புக் நிறுவனம் மே மாதம் 2014ஆம் ஆண்டு கைப்பற்றியது. இது உலகின் அதிக அளவில் பயன்படுத்தக் கூடிய குறுந்தகவல் செயலியாக உள்ளது. இங்கு வாட்ஸ்ஆப் செயலியின் வழங்கப்பட்டிருக்கும் சில புதிய அம்சங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது கணினிகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். உங்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனில் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தினால் உங்களால் அதை உங்கள் கணினியிலும் பயன்படுத்த முடியும். வாட்ஸ்ஆப் செயலி இலவசமாக கிடைக்கின்றது. ஆகையால் இதற்கென நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. முன்பு இதற்கென நீங்கள் ஆண்டுக் கட்டணம் செலுத்தி இருக்கலாம்.உங்கள் போன் எண்ணை மாற்றினாலும் உங்கள் தரவுகளை அணைத்தையும் புதிய எண்ணில் பெற முடியும்.
இந்த அம்சம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. நீங்கள் போன் கால் செய்வதை போன்று வாட்ஸ் ஆப் கால் செய்ய முடியும்.

நீங்கள் உரையாடும் அனைத்தையும் உங்கள் கூகுள் டிரைவ் கொண்டு பேக் அப் எடுக்க முடியும்.உங்கள் குறுந்தகவல்களை மேலும் சுவாரஸ்யமாக மாற்ற இப்பொழுது புதிய எமோஜிக்களை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.வாட்ஸ் ஆப் கால் அம்சங்களை கொண்டு வந்த பின் போன் அழைப்புக்கென்று குறைவான தரவு பயன்பாட்டை தற்பொழுது வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது.இதன் மூலம் உங்கள் வாட்ஸ் ஆப் பயன்பாட்டை கண்காணிக்க முடியும். நீங்கள் எத்தனை மெசேஜ்கள் அனுப்பி உள்ளீர்கள் மற்றும் நீங்கள் பெற்ற மெசேஜ்களின் எண்ணிக்கை மற்றும் இழுக்கப்பட்ட தரவுகள் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி