வல்லுநர் குழுவில் அரசு ஊழியரை சேர்க்க வலியுறுத்தல்

அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களின் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்ட 20 அம்ச கோரிக்கைகளில் 11 கோரிக் கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி. அதில், 8 கோரிக்கைகளை செயல்படுத்துவதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஓய்வூதிய மாற்றம், காலமுறை ஊதியம் வழங்குவது குறித்து அமைக்கப்பட உள்ள வல்லுநர் குழுவில் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். தற்போது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோமே தவிர, விலக்கிக்கொள்ளவில்லை. அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது அரசியல் சாயம் பூசுவது தவறானது. அரசு திட்டங்களை கண்காணிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் அடங்கிய கண்காணிப்புக் குழுவில், அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்தவும், ஊழல், முறைகேடுகளை தடுக்கவுமே இதைக் கோருகிறோம். லோக்ஆயுக்தா சட்டம் கொண்டுவருவது தமிழகத்தை வளர்ச்சி அடையச் செய்யும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி