நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினசரி தேசிய கொடி ஏற்றிவைக்கும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் ஆயிரத் துக்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் தினசரி தேசிய கொடி ஏற்றிவைக் கும்படி றிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கூடுதல் கமிஷனர் யூ.என்.கவாரே மண்டல பள்ளி அலுவலங்களுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.
:
பள்ளிகளில் தினசரி தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும். கொடி ஏற்றுவதற்கான இடத்தை அந்தந்த பள்ளி முதல்வர்கள் தேர்வு செய்து உரிய முறையில் பரா மரிக்க வேண்டும். காலை வேளை களில் நடத்தப்படும் பிரார்த்தனை யின் போது தேசிய கொடி ஏற்றப் பட்டு, மாணவர்கள் அதற்கு வணக்கம் செலுத்த பழக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று, ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை யின் அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.