பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.
SSLC விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1–ந்தேதி முதல் ஏப்ரல் 25–ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இதில் 12,53 பள்ளிகளை சேர்ந்த 10,72,185 பேர் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.முதல் நாளான ஒன்று தமிழ் மொழிப்பாடத்திற்கான விடைத்தாள் திருத்தப்படுகின்றன. இந்த பணி வரும் ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது.