சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

The government on Friday slashed interest rates payable on small savings including PPF and Kisan Vikas Patra in a bid to align them closer to market rates. File photo

புதுடில்லி: சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக் கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

பொது சந்தைக்கு ஏற்ப, அதாவது வங்கிகள் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும் மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, கடந்த மாதம், 16ம் தேதி அறிவித்தது.அதன்படி, 2016 - 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல், ஜூன் 30ம் தேதி வரையிலான, முதல் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம் 16ம் தேதி, தபால் நிலையங்களுக்கான குறுகிய கால முதலீடுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. தபால் நிலைய சிறுசேமிப்புக்கான வட்டி, 4 சதவீதமாக தொடர்கிறது.

புதிய வட்டி விகிதங்கள்: 
திட்டத்தின் பெயர்- தற்போதைய வட்டி-புதிய வட்டி
பி.பி.எப்.-8.7-8.1
கிசான் விகாஸ் பத்ரா-8.7-7.8
தேசிய சேமிப்பு பத்திரம்-8.5-8.1
மாத வருவாய் கணக்கு (5 ஆண்டுகள்)- 8.4-7.8
பெண்குழந்தைகள் சேமிப்பு திட்டம்- 9.2-8.6
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (5 ஆண்டுகள்)- 9.3-8.6
கால முதலீடுகள் (1 ஆண்டு)- 8.4-7.1
கால முதலீடுகள் (2 ஆண்டு)- 8.4-7.2
கால முதலீடுகள் (3 ஆண்டு)- 8.4-7.4
கால முதலீடுகள் (5 ஆண்டு)- 8.5-7.9
தொடர் வைப்பு நிதி (5 ஆண்டு)- 8.4-7.4

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி