இரயில் டிக்கெட் புக் செய்ய உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் !


இரயில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு, இரயில் டிக்கெட் கிடைக்கும் வகையில் புதிய ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் கரக்பூர் IIT மாணவர் இந்த சாதனையை செய்துள்ளார்.


ரயில் நிலையங்கள் வாரியாக, டிக்கெட் பதிவுக்கான ஒதுக்கீடு உள்ளது. குறிப்பிட்ட ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட் பதிவு செய்ய முற்பட்டால், காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாக காட்டக்கூடும். அதேசமயம், அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் பதிவு செய்யும்போது, டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


rail ticket booking app
இரயில் டிக்கெட் புக்கிங் "ஆப்"

டிக்கெட் கிடைக்கக்கூடிய ரயில் நிலையங்களை, ஒவ்வொன்றாக முயற்சித்து பார்ப்பது இயலாத காரியம். எனவே, அந்த பணியை செய்யும் வகையில், இந்த மொபைல் ஆப் தயாரிக்கப்பட்டுள்ளது.

படிக்க: டாப் 10 ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்ஸ் 2010. 

இந்த மொபைல் ஆப்பிற்கு  'டிக்கெட் ஜுகாத்' எனப் பெயரிட்டுள்ளனர்.

கரக்பூர் ஐ.ஐ.டி., சமீபத்தில் நடத்திய உலக வர்த்தக மாதிரி போட்டியில், இந்த ஆப், முதல் பரிசாக, 1.5 லட்சம் ரூபாய் வென்றது குறிப்பிடத்தக்கது.டிக்கெட் ஜூகாத் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய சுட்டி:


டிக்டெக் ஜூகாத் ஆப் பயன்படுத்தி எப்படி ரயில் டிக்கெட் புக் செய்வது என்பது
குறித்த விரிவான விளக்கங்களைப் பெற கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.

https://www.facebook.com/kalakkalkanoli/videos/1059418410775314/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி