ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை ..

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வீரமணி ஆகியோர் நேற்று ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினார்கள். இந்த கூட்டத்தில் நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, நிதித்துறை செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(ஜாக்டோ), தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல ஆசிரியர்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிவில் ஜாக்டோ உயர் மட்டகுழு உறுப்பினர் தியாகராஜன், ஜாக்டா அமைப்பாளர் பி.கே.இளமாறன் ஆகியோர் கூறுகையில், மத்திய அரசு கொடுக்கும் ஊதியத்தை போல தமிழகத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தோம். அமைச்சர்கள் எங்களை அழைத்து பேசினார்கள். கோரிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலிப்பதாக தெரிவித்தனர் என்றனர். கோரிக்கைகள் வருகிற சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அறிவிக்க இல்லை என்றால் மீண்டும் கூட்டம் கூடி அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து பேசப்படும் என்று ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.தமிழக அரசுடன் ஆசிரியர் சங்கங்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உரிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர் ஆறாவது ஊதியக் குழுவின் அனைத்துப் படிகளையும் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உள்பட 5-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளைப் பரிசீலிப்பது குறித்த அறிவிப்புகள் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என்றும் அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அறிவிப்புகள் இல்லாவிட்டால் பிப்ரவரி 16-ஆம் தேதிக்குப் பிறகு போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர். அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார். அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலராகிய நான் கோரிக்கையை விளக்கி பேசும் போது தலைமைச்செயலர் ஏன் இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி.. ஏன் எனில் அவர் ஏற்கனவே கல்வித்துறை, மற்றும் நிதித்துறை செயலராக இருந்தவர் என்றும் தற்போது அரசின் முதன்மை செயலராக இருப்பதால் பங்கெடுக்காதது குறித்து கவலையாக உள்ளதாகவும் கூறினேன் . அதற்கு அரசு தரப்பில் அவர் முக்கிய வேலையாக சென்றிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பெருமக்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக சுமார் 2 மணி நேரம் கேட்டனர். ஜாக்டோ சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது. நிதியமைச்சர் கல்வி அமைச்சரை பதில் கூறுமாறு அழைத்தார். அதற்கு கல்வி அமைச்சர் நிதியமைச்சரே இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளதால் அவரையே பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டார். நிதியமைச்சர் அவர்கள் தனது பதிலில் தற்போது சட்டமன்றம் கூட உள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 16-ந்தேதி பட்ஜெட் அறிக்கையில் நல்ல தகவல் வரும் என நம்பிக்கை வைக்க கேட்டுக்கொண்டார். பிறகு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கூட்டம் சுமுகமாக முடிந்தது. அரசின் பேச்சு வார்த்தைக்குப்பின்பு ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூடி கலந்தாலோசனை செய்தனர். இறுதியில் நிதியமைச்சர் அவர்கள் அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் வரும் தமிழக அரசின் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16-ந்தேதி பட்ஜெட் அறிவிப்பில் கோரிக்கைகள் ஏற்பு குறித்து அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு அறிவிப்புகள் இல்லை எனில் ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் வரும் 17-ந்தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும் எனவும் ஜாக்டோ உயர்மட்டக்குழுவினர் ஒருமனதாக முடிவாற்றி பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் தெரிவித்தனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி