எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதேர்வுக்கு முன்பு ஜாதி, இருப்பிட சான்று

ராமநாதபுரம்: ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு தேர்வு துவங்க உள்ளநிலையில், இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்ததும், உயர்கல்விக்காக வேறு பள்ளியில் சேர வேண்டியநிலை உள்ளது. இதனால் அவர்கள் சான்றிதழ்கள் வாங்க தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து 8 ம் வகுப்பு மாணவர்களுக்காவது தேர்வுக்கு முன்பு சான்றிதழ் வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுதலின்றி அனைத்து மாணவர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று வருவாய்த்துறையிடம் மொத்தமாக ஒப்படைக்க வேண்டும். பின் ஜாதி, இருப்பிடச் சான்றுகளை பெற்று மாணவர்களிடம் வினியோகிக்க வேண்டும். இதற்காக மாணவர்களை தாலுகா அலுவலகங்களுக்கு அலையவிட கூடாது எனவும், தெரிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி