
கடந்த 10 நாட்களாக போலீஸ் அடக்குமுறையையும் மீறி தமிழ் நாடு அரசு ஊழியர்கள் நடத்தும் வீரம் செறிந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து நேற்று (19-02-2016) மதியம் சென்னை அண்ணா சாலை தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், அனைத்திந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம், அனைத்திந்திய BSNL DOT ஓய்வூதியர் சங்கம் ஆகிய அமைப்புக்கள் எழுச்சி மிகுந்த ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு மகா சம்மேளனத்தலைவர் தோழர் ஜே. ராமமூர்த்தி தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். அனைத்திந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ் மாநில, அனைத்திந்திய பொதுச் செயலாளர் தோழர். K. ராகவேந்திரன் வாழ்த்துரை ஆற்றினார். நிறைவாக மகா சம்மேளன பொதுச்செயலாளர் தோழர். M. துரைப்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். தமிழக முதல்வர் போராடும் ஊழியர்களை விரைவில் அழைத்து சுமூகமாக பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகைகளை தீர்த்து வைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அமைப்புக்களையும் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.




