இனி எல்லாமே 'ஆன்லைன்' தான்! வணிக வரித்துறையில் மாற்றம்

கடும் இழுபறிக்குப் பின், வணிக வரித் துறையில், 235 கோடி ரூபாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வரி எளிதாகச் செலுத்த, 'இ - சி டாக்ஸ்' என்ற புதிய இணைய தளமும் துவக்கப்பட்டு உள்ளது. அரசின் வரி வருவாயில், 75 சதவீதம், வணிக வரி மூலம் கிடைக்கிறது. எனவே, வரி செலுத்துவதை எளிமையாக்க, 235 கோடி ரூபாயில், அனைத்து நடைமுறைகளும் கணினி மயமாக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இது, 2014 ஏப்ரலில் செயல்பாட்டுக்கு வருவதாக இருந்தது.

பல்வேறு பிரச்னைகளால், இழுபறியில் இருந்த இந்த திட்டம், தற்போது, புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டு, அவசர அவசரமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஜன., 29ல், முதல்வர் ஜெயலலிதா, இந்த திட்டத்தையும், 'இ - சி டாக்ஸ்' என்ற, புதிய இணையதள செயல்பாட்டையும் துவக்கி வைத்துள்ளார். அரசு எந்த அறிவிப்பும் வெளியிடா விட்டாலும், புதிய நடைமுறை, முழு வீச்சில் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.

என்னென்ன வசதிகள்...

* பதிவு செய்யவும், அதற்கான, 'டின்' எண் பெறுதல், பெயர் மாற்றம், பங்குதாரர் மாற்றத்திற்கும், 'ஆன்லைன்' வழியாக, வர்த்தகர்கள் விண்ணப்பிக்கலாம்

* விண்ணப்ப நிலையை, ஆன்லைன் வழியாகவே வணிகர்கள் தெரிந்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., -மற்றும் 'இ - மெயில்' மூலமாகவும் தகவல் பெறலாம்* பதிவு கட்டணம் மற்றும் வரியை இனி, காசோலை அல்லது பணமாகச் செலுத்த முடியாது; ஆன்லைன் வழியாகவே இதை கையாள முடியும்* விற்பனை விவரம் குறித்து, வணிகர்கள் மாதாந்திர, 'ரிட்டன்' தாக்கல் செய்யும்போது, 'டிஜிட்டல்' கையொப்பம் கட்டாயம். பிப்., மாதத்திற்கான, 'ரிட்டன்' மார்ச்சில் தாக்கல் செய்யும்போது, புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்* இந்த நடைமுறை வணிகர்களுக்கு எளிது; வரி ஏய்ப்பும் குறையும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி