திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆந்தூரியம் மலர்கள்


காதலர் தினத்தையொட்டி திண்டுக்கல்லில் இருந்து ஆந்தூரியம் மலர்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. காதலர் தினம் உலகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது

. இந்த நாளில் இளம் உள்ளங்களில் இருந்து பொங்கிப்பெருகும் அன்பினை தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு வெளிப்படுத்துவார்கள். இதற்காக வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் மட்டுமின்றி ரோஜா உள்ளிட்ட வண்ண மலர்களையும் பரிமாறிக்கொள்வது வழக¢கம். காதலர் தினத்தில் இளம்பெண்களின் மனங்களை விலை மதிப்புள்ள பரிசுகளை விட அதிகமாக கவர்வது மலர்கள் மட்டுமே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் காதலர் தினத்தன்று மலர்களுக்கு அதிக அளவில் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். இந்த மலர்கள் பட்டியலில் பெண்கள் வழக்கமாக கூந்தலில் சூடிக்கொள்ளும் மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ, கனகாம்பரம் போன்றவை இல்லை. இதற்கு மாறாக ரோஜா, ஆந்தூரியம் உள்ளிட்ட பல்வேறு மலர்களுக்கு முக்கியத்துவம் அதிகம்.

ஆந்தூரியம் மலர்கள்இதனால் திண்டுக¢கல் மாவட்டம் தடியன்குடிசையில் பசுமை குடில்களில் உற்பத்தியாகும் ஆந்தூரியம் மலர்கள் காதலர் தினத்தையொட்டி சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் ஆண்டு தோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த மலர்கள் ஒரு வார காலம் வரை வாடுவதில்லை என்பதும் அவற்றின் சிறப்பாகும். மேலும், பல்வேறு வண்ணங்களில் இந்த மலர்கள் அனைவரின் கண்களையும் கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கிறது.

இதனால் தற்போது இந்த மலர்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. ஒருவார காலம் வரை வாடுவதில்லை என்பதால் வெளிநாடுகளில் இந்த மலர்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி