தமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரிகளில் 344 இடங்கள் அதிகரிக்கப்படும் பிரதமர் மோடி

தொழிலாளர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.

கோவை வரதராஜபுரத்தில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். பின்னர் அவர் தமிழில் வணக்கம் தெரிவித்து, ’கோவை மாநகரம் வந்ததில் மகிழ்ச்சி’ என்று கூறி உரையை தொடங்கினார்.

புதிய மருத்துவக்கல்லூரியை கோவையில் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையை சுற்றிஉள்ள பயனாளர்கள் பயன் அடைவார்கள்.

தொழிலாளர்களின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

தமிழக அரசிடம் ஒப்படைத்த கல்லூரி சிறப்பாக செயல்படும் என்று நம்புகின்றேன்.கூட்டுறவுக் கூட்டாட்சி என்பதற்கு தகுந்தவாறு மத்திய அரசு செயல்படுகிறது.காந்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இ.எஸ்.ஐ. திட்டம் செயல்படுத்தப்படுகிறது.60 ஆண்டுகளுக்கு முன்னதாக 2 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மட்டுமே இருந்தது. கான்பூர் மற்றும் டெல்லியில். தற்போது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இ.எஸ்.ஐ. திட்டம் 830 மையங்களில் செயல் படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இ.எஸ்.ஐ. திட்டத்தினால் 28 லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 10 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்படுகிறது. இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தினால் 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்அடைந்து வருகின்றனர்.

சமூகப் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் இந்த அரசு உறுதி பூண்டு உள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்களில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து உள்ளோம். இ.எஸ்.ஐ. மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. தமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரிகளில் 344 இடங்கள் அதிகரிக்கப்படும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.

நெல்லை இ.எஸ். ஐ. மருத்துவமனையில் 50 படுக்கைகளை 100 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி