100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–

சென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து படிக்க அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

அதனால் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதாக அறிவித்தால் மாணவ–மாணவியர்கள் அனைத்து பாடங்களையும் முழு கவனத்துடன் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ–மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசும், பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் மொத்த மதிப்பெண்கள் 595/600 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ– மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசு வழங்கப்படும். பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி