10–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அனுமதிச்சீட்டு ஆன்லைனில் நாளை மறுநாள் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

அடுத்த மாதம் (மார்ச்) நடைபெறவுள்ள 10–ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் www.tndge.in என்ற இணைதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

. பதிவிறக்கம் செய்யும் முறை www.tndge.in என்ற இணைதளத்தில் தோன்றும் “SSLC EXAM MARCH 2016 PRIVATE CANDIDATEHALL TICKET PRINTOUT என்பதை “கிளிக்“ செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை ஆகியவற்றை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி