ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking)



ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) பிறந்த தினம் இன்று ஜனவரி 8, 1942 ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்; இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக உள்ளார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருங்குழி (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருங்குழிகளிலிருந்து ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருங்குழிகளிலிருந்து துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றனவென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.

21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.

இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time) (The Universe in a Nutshell ) ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தன. ஸ்டீபன் ஹாக்கிங் தமது பெயரைக் காப்புரிமை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கிலாந்தின் ஆக்ஸ் போர்டில் பிறந்தவர். குடும்பத்தில் அனைவருமே அறிவுஜீவிகள். அப்பா மருத்துவ ஆராய்ச்சியாளர். சிறு வயதிலேயே ஆராய்ச்சித் திறன் கொண்டிருந்தார்.

16 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து, மறுசுழற்சி செய்யப்பட்ட பாகங்களைக் கொண்டு கணித கோட்பாடுகளை தீர்ப்பதற்கான ஒரு கணினியை உருவாக்கினார். 1962-ல் இளங்கலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகள் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார்.

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கவுரவ பட்டங்களைப் பெற்றுள்ளார். ராயல் சொசைட்டியின் உறுப்பினர். அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்படுகிறார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis - ALS) என்ற தசை உருக்கி நோய் அவரைத் தாக்கி இருப்பது அவருடைய 21-ஆம் வயதில் கண்டறியப்பட்டது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.

மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்.

இந்த நோய் அவரது உடலியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக செயலிக்கச் செய்து வந்தாலும், ஆராய்ச்சிகள், எழுத்துப் பணிகள், பொதுவாழ்வு ஆகிய எதையுமே அவர் நிறுத்தவில்லை.

‘இறைவன் உலகைப் படைத்தான் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. சுவர்க்கம், நரகம் என்பதெல்லாம் தேவதைக் கதைகளில் வரும் கற்பனைகள்தான்’ என்ற இவரது இறையியல் கோட்பாடுகள் குறித்த கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.

அண்டவெளித் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர். அண்டவியலும், குவான்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவரது முக்கியமான ஆய்வுத்துறைகள். கருங்குழிகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கருங்குழிகளிலிருந்து துகள்கள் வெளியேறுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறு வெளியேறும் துகள்களுக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டது. இவரது ஏ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் மற்றும் தி யுனிவர்சல் இன் ஏ நட்ஷெல் ஆகிய இரண்டு புத்தகங்களும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஐன்ஸ்டீனுக்கு அடுத்த ஆற்றல் மிக்க அறிவியலாளர் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து தன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி