விரைவில் வருகிறது ஏடிஎம்., மூலம் வங்கி கடன் பெறும் வசதி

ஏடிஎம்.,க்களை வங்கி கிளைகளாக செயல்பட வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக வங்கி கடனுக்கு விண்ணப்பித்தல் மற்றும் வங்கி கடன் தொகை பெறுதல் ஆகிய சேவைகளை ஏடிஎம்., மையங்கள் மூலமே வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது.ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஏடிஎம்., மையங்களை வங்கி கிளைகளாக செயல்பட வைப்பது தொடர்பாக பல தனியார் வங்கிகள் ஏற்கனவே அளித்த கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது

இந்த கோரிக்கையை ஏற்ற ரிசர்வ் வங்கி, விரைவில் வங்கி சேவைகள் பலவற்றை ஏடிஎம் மையங்கள் மூலம் முடிவு செய்துள்ளது.இதனால் இனி வாடிக்கையாளர்கள், ஏடிஎம்., மையங்களிலேயே வங்கி கடன், இன்சூரன்ஸ், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்து, ஏடிஎம் மூலமே அவற்றை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட உள்ளது. இதனால், வங்கி சேவையை பெற, வங்கியில் மணிக்கணக்கில் காத்துக் கிடங்கும் அவஸ்தையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இருப்பினும் பணபரிவர்த்தனை ஏதும் இத்தகைய ஏடிஎம் மையங்கள் மூலம் செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1.9 லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. தற்போது, பணம் செலுத்துவது, பணம் எடுப்பது, ரகசிய எண் மாற்றுவது, செக்புக் கோரிக்கைகள், கணக்கு இருப்பு விபரம், பண பரிமாற்றம், கட்டணம் செலுத்துதல், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட சேவைகளே ஏடிஎம்.,க்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. ஏடிஎம் சேவைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் விதமாக அவற்றை வங்கிக் கிளைகளாக செயல்படவைப்பது என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி