மருத்துவ கேள்விகளுக்கு சரியான பதில்: அசத்துகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி

சென்னையில், 9ம் வகுப்பு மாணவி, நோய்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்த மருத்துவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அசத்தினார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி பாக்கிய ஸ்ரீ, 14. தந்தை பாஸ்கர், விழுப்புரத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது வீடு, அயப்பாக்கத்தில் உள்ளது. பாக்கிய ஸ்ரீ, நான்கு வயது முதல், மருத்துவம் தொடர்பான புத்தகங்களை வாசித்து வருகிறார். அவர், ஒருமுறை படித்தால் போதும், தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, மடை திறந்த வெள்ளம் போல பதிலளிக்கும் நினைவாற்றலை பெற்றுள்ளார். அதை பரிசோதிக்கும் வகையில், லயோலா கல்லூரியில் நேற்று, 'நினைவூற்று' என்ற பெயரில் நிகழ்ச்சி நடந்தது. இதில், கல்லூரியின் முதல்வர் ஜோசப் அந்தோணி சாமி, பாக்கிய ஸ்ரீக்கு விருது வழங்கி கவுரவித்தார்.அசராமல் பதில்முன்னதாக, ஏழு பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர், நோய்களுக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து, பாக்கிய ஸ்ரீயிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர், அசராமல் பதிலளித்து அசத்தினார்.


மாணவி பாக்கிய ஸ்ரீ கூறியதாவது:
நான்கு வயதில், அப்பாவிடமிருந்து மருத்துவம் சார்ந்த புத்தகத்தை விளையாட்டாக வாங்கி படித்தேன். அது, எனக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது. என் நினைவாற்றல், அதற்கு பக்கபலமாக உள்ளது.விழிப்புணர்வு:

எம்.பி.பி.எஸ்., மருத்துவருக்கு இணையாக, மருத்துவம் தொடர்பான புத்தகங்களை வாசித்து முடித்துள்ளேன். அதிலிருந்து எந்த கேள்வி கேட்டாலும், உடனடியாக என்னால் பதிலளிக்க முடியும். எதிர்காலத்தில், மரபு வழி சார்ந்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதே என் லட்சியம். அண்மையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு செய்தேன். இவ்வாறு மாணவி கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி