செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி

பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்துகின்றன

மூன்றாண்டுகளுக்கு பின், அன்னை தெரசா பல்கலை சார்பில், பிப்., 21ல், தேர்வு நடக்கிறது. இது குறித்து, www.setexam2016.in என்ற இணையதளத்தில், விவரம்வெளியிடப்பட்டுள்ளது. ஜன., 20 முதல் பிப்., 10ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவையை சேர்ந்த, 'செட்' தேர்வர்கள் சிலர் கூறுகையில், 'யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வுக்கும், மாநில அரசின், 'செட்' தேர்வுக்கும், அறிவிப்புக்கு பின்னால், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்படும். தற்போது, தேர்வு விரைவில் நடத்த உள்ளதால், தேர்வர்கள் தயாராக சிரமமாக இருக்கும்; தேர்வு தேதியை மாற்ற வேண்டும்' என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி