சேலம் க்ளூனி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 483பேர் பானை மீது நின்று பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். பள்ளி வளாகத்தில் இன்று பானையின் மீது நின்று இறைவணக்கம், பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே ஆகிய பாடல்களுக்கு 483 மாணவிகளும் ஒரு சேர சரியாக 6.4 நிமிடங்கள் பரதநாட்டினம் ஆடினர்.
இந்த சாதனைக்காக 2ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், நடன ஆசிரியை லதா மாணிக்கம் பயிற்சியின் கீழ் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தனர். உலகிலேயே மிக அதிகமான நபர்கள், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பானை மீது நடனம் ஆடிய நிகழ்வு என்ற வகையில் இந்த சாதனைஉலக கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது