வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் கிடையாது

வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த இனி கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளதாவது:வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், பெரும்பாலான வாட்ஸ் ஆப் பயனர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இல்லை என்பது எங்கள் கவனத்துக்கு வந்ததன் பேரில், வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.விளம்பரம் கிடையாது

கட்டணம் வசூலிக்கப்படாத காரணத்தால் வேற்று நிறுவனங்களின் விளம்பரங்கள் பயனர்களின் வாட்ஸ் அப் திரையில் வருமா என்று யாரும் அச்சப்பட வேண்டாம். அப்படியான திட்டங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால், விமானம் தாமதமாவது, மருந்துக் கட்டணம் போன்ற சேவை சார்ந்த தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயனர்களுக்கு அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கிற திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம். இது தொடர்பாக பயனர்கள் தங்களது கருத்தை வாட்ஸ் அப் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி