ராமநாதபுரம் :'செல்வ மகள்' சேமிப்பு திட்ட டிபாசிட் சேகரிப்பில் ராமநாதபுரம் தபால் துறை முன்னிலை பெற்றுள்ளது.பெண் குழந்தைகளின் நலன் கருதி அதிக வட்டியுடன் கூடிய 'செல்வ மகள்' சேமிப்பு திட்டத்தை 2015 ஜன.,22ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சமீபத்தில் இந்த சேமிப்பிற்கான வட்டி 9.1 சதவீதத்தில் இருந்து 9.2 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் தபால் கோட்டத்தில் 32,837 பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். டிபாசிட் சேகரிப்பில் 2014--15 நிதி ஆண்டு முடிவில், ராமநாதபுரம் தபால் கோட்டம் ரூ.6 கோடி வசூல் செய்து மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி உட்பட 11 மாவட்டங்களில் முதலிடம் பிடித்துள்ளது. நடப்பு (2015-16) நிதி ஆண்டில் ரூ.10 கோடி டிபாசிட் சேகரிப்புடன் 3ம் இடம் பிடித்துள்ளது. கன்னியா குமரி, மதுரை தபால் கோட்டங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.''மீண்டும் முதலிடம் பிடிக்கும் முயற்சியில் களப்பணியாற்றி வரு கிறோம்,'' என ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் கூறினார்