கூகுள் குரோம் மற்ற பிரவுசர்களின் செயல்பாடுகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கும்


மேலாகப் பார்க்கையில், கூகுள் குரோம் மற்ற பிரவுசர்களின் செயல்பாடுகளைக் கொண்டதாகவே காட்சி அளிக்கும். ஆனால், அதன் இயக்கங்கள் சிலவற்றில், நாம் பிற பிரவுசர்களிடம் இல்லாத வசதிகளைக் காணலாம். சில அமைப்புகளை மாற்றி வைப்பதன் மூலம், நம் வசதிக்கேற்ப அவற்றை இயங்கும்படி செய்யலாம்


இதன் சில மறைத்து வைக்கப்பட்ட அம்சங்கள், நம் பிரவுசர் அனுபவத்தினைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன என்பதே உண்மை. இதில் என்ன சிறப்பென்றால், இவற்றை அனுபவிக்க, இந்த வசதிகளைப் பெற நாம் பெரிய தொழில் நுட்ப அறிவெல்லாம் கொண்டிருக்கத் தேவையில்லை. எந்தப் பயனாளரும் எளிமையான வழியில் இவற்றை மேற்கொள்ளலாம்.

ஒலிக்காமல் இருக்கும்படி அமைக்க நாம் ஓர் இணைய தளத்தைத் திறந்திருப்போம். அந்த தளத்தில், ஒரு விடியோ விளம்பர இயக்கி இருக்கும். ஏதேனும் ஒரு விளம்பரப் படத்தை உடனே இயக்கும். சில வேளைகளில், எங்கு படம் உள்ளது, எப்படி இயக்கப்படுகிறது என்று கூடத் தெரியாது. மிகச் சிறியதாகக் கீழாக இருக்கும். அதற்குள் அதன் ஒலி நாராசமாக நம் காதுகளை வந்தடையும்.

இது போன்ற விடியோ படக் காட்சிகள் இயங்கும்போது, நாம் அதிர்ச்சியுற்று, நம் சிஸ்டம் ஒலியை முடக்குவோம்.

இதற்குப் பதிலாக, குரோம் ஒரு நல்ல வழியைத் தருகிறது.

குறிப்பிட்ட இணைய தளம் திறக்கப்பட்டுள்ள டேப்பில் இதற்கான வழி உள்ளது. அங்கு சிறிய ஒலிப்பான் படம் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், அந்த தளத்தில் எந்த ஒலியும் இயக்கப்பட மாட்டாது.

இதனை இயக்க குரோம் பிரவுசரில் சின்ன அளவில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மாறா நிலையில், அந்த படத்தில் எந்த இயக்கமும் தரப்பட்டிருக்காது. இல்லை எனில், டேப்பில், அந்த ஒலிப்பான் அடையாளம் தெரியும். அதில் கிளிக் செய்தால், எந்த மாற்றமும் ஏற்படாது. இதனை இயக்க, கீழே தரப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை அப்படியே, பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் அமைத்து எண்டர் தட்டவும்.

chrome://flags/‪#‎enable‬-tab-audio-muting உடன், உங்களுக்குப் பல கட்டளை வரிகள் அடங்கிய பக்கம் காட்டப்படும். உடனே பயந்துவிட வேண்டாம். நீங்கள் எந்த வரியில் செயல்பட வேண்டுமோ, அந்த டெக்ஸ்ட் மஞ்சள் வண்ணத்தில் காட்டப்படும். அங்குள்ள enable என்பதில் கிளிக் செய்திடுங்கள்.


பின்னர், பிரவுசர் மீண்டும் இயக்கப்படும். இப்போது தளங்களின் ஆடியோவினை முடக்கும் வழி உங்களுக்குத் தரப்பட்டதாக பிரவுசர் இயங்கும். எந்த தளத்திற்கான டேப்பிலும், ஸ்பீக்கர் ஐகானை இயக்கி, முடக்கலாம். மீண்டும் ஒலி வேண்டும் என்றால், மீண்டும் ஒருமுறை அதே ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்திட, ஒலி இயக்கப்படும்.


டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க எளிய வழி

****************************************************

நாம் இணைய தளங்களைப் பார்வையிடுகையில், நாம் அனைவரும் மேற்கொள்ளும் ஒரு செயல், அதன் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதுதான். அது ஒரு சொல்லாகவோ, பாராவாகவோ, அல்லது குறிப்பிட்ட அளவிலான டெக்ஸ்ட்டாகவோ இருக்கும். பெரும்பாலானவர்கள் மவுஸ் கொண்டு டெக்ஸ்ட்டின் தொடக்கம் முதல், இறுதி வரை இழுத்துத் தேர்ந்தெடுப்போம். இது பெரிய அளவிலான டெக்ஸ்ட் எனில், சற்று சிரமம் தரும் செயலாக இது இருக்கும். குரோம் பிரவுசரில் இதற்கு ஒரு விரைவான எளிய வழி ஒன்று தரப்பட்டுள்ளது.


ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், அதன் மீது இருமுறை கிளிக் செய்திடுங்கள். மவுஸ் கொண்டெல்லாம் இழுக்க வேண்டாம். பாரா ஒன்றில் எங்காவது மூன்று முறை தொடர்ந்து கிளிக் செய்தால், அந்த பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இங்கும் மவுஸை இழுக்க வேண்டாம். சரி, பாரா ஒன்றின் நடுப் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், என்ன செய்வீர்கள்.


தொடக்கத்தில் மவுஸைக் கிளிக் செய்து, இறுதி வரை அப்படியே இழுத்து வந்து தேர்ந்தெடுப்பீர்கள். இங்கு அது தேவையில்லை. எங்கு டெக்ஸ்ட் பகுதி தொடங்குகிறதோ, அங்கு ஒருமுறை கிளிக் செய்திடுங்கள். பின்னர், டெக்ஸ்ட் எங்கு முடிகிறதோ, அங்கு ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு கிளிக் செய்திடுங்கள். குறிப்பிட்ட பகுதி மட்டும் ஹை லைட் செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டதனைக் காட்டும். நமக்கு எவ்வளவு நேரம் மிச்சமாகிறது. மேலே சொல்லப்பட்டவை போல பல ட்ரிக்ஸ் குரோம் பிரவுசர் கொண்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி