ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: (அடைப்புக்குள் தற்போது வகித்து வரும் பதவி)
கரூர் ஆட்சியராக டி.பி. ராஜேஷ் (கிருஷ்ணகிரி ஆட்சியர்) கிருஷ்ணகிரி ஆட்சியராக சி. கதிரவன் (மதுரை மாநகராட்சி ஆணையர்) பெரம்பலூர் ஆட்சியராக கே.நந்தகுமார் (ராமநாதபுரம் ஆட்சியர்) திருப்பூர் ஆட்சியராக ஜெயந்தி (கரூர் ஆட்சியர்) மதுரை ஆட்சியராக கே. வீரராக ராவ்( திருவள்ளூர் ஆட்சியர்) சென்னை ஆட்சியராக கோவிந்தராஜ் (திருப்பூர் ஆட்சியர்) ராமநாதபுரம் ஆட்சியராக எஸ். நடராஜன் ( ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர்) திருவள்ளூர் ஆட்சியராக சுந்தரவல்லி நியமனம் (சென்னை ஆட்சியர்) வருவாய் நிர்வாக இணை ஆணையராக எல். சுப்பிரமணியன் ( மதுரை ஆட்சியர்) சென்னை மாநகராட்சி ஆணையராக சந்திரமோகன் (குடிநீர் வழங்கல் நிர்வாக இயக்குநர்) சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நிர்வாக இயக்குநராக விக்ரம் கபூர் (சென்னை மாநகராட்சி ஆணையர்) நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.