தனியார் கல்வி நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) சென்னை மண்டல ஆணையரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். அவருடன் 2 அலுவலர்கள், 4 இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டனர். கைதான வர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு மண்டல ஆணையராக (எண்-1) எஸ்.துர்கா பிரசாத் (51) பணிபுரிந்து வருகிறார். அவர் மீது சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.சிபிஐ ரகசிய கண்காணிப்புஇதையடுத்து அவரது நடவடிக் கைகளை சிபிஐ போலீஸார் ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கினர்.சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரி நிர்வாகம், தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான வருங் கால வைப்பு நிதியை செலுத்தி யதில் முறைகேடு செய்தததாக கூறப்படுகிறது. இதை மறைப் பதற்காக கல்லூரி நிர்வாகத்திடம் ரூ.25 லட்சத்தை துர்கா பிரசாத் லஞ்சமாக கேட்டதாக சிபிஐக்கு சில தினங்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
காரில் சோதனை
இந்நிலையில், நேற்று முன்தினம் தனியார் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் செங்கோட்டையன் என்பவர், சுடலைமுத்து என்ற இடைத்தரகர் மூலம் ரூ.14.5 லட்சத்தை கொடுத்து அனுப்பியுள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட துர்கா பிரசாத், காரில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சிபிஐ போலீஸார், காரில் சோதனை செய்தனர். அதில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்தது.செங்கோட்டையன் ரூ.15 லட்சத்தை கொடுத்து அனுப்பியுள் ளார். அதில் தரகர் சுடலைமுத்து ரூ.50 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு மீதி பணத்தை துர்கா பிரசாத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.துர்கா பிரசாத்திடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வருங்கால வைப்பு நிதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளான ஏழுமலை, மணிகண்டன், இடைத்தரகர்கள் சுடலைமுத்து, சூர்ய நாராயணன், ராஜா, தனியார் கல்லூரி பிஆர்ஓ செங்கோட்டையன் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட துர்கா பிரசாத் உட்பட 7 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க நீதிபதி ஏ.கந்தகுமார் உத்தரவிட்டார். அதன்படி, 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
7 பேர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7, 12, 13(2), 13(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான அதிகாரிகளின் அலு வலகம் மற்றும் வீடுகள், இடைத் தரகர்களின் வீடுகள், அவர்களது நெருங்கிய உறவினர்களின் வீடுகள் என 18 இடங்களில் சிபிஐ போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத சொத்துகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள் ளதாக தெரிகிறது.