தமிழகத்தில் அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் "பாஸ்போர்ட்' பெறவும், புதுப்பிக்கவும்புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, வெளிநாடு செல்ல விரும்பும் ஆசிரியர்கள், "பாஸ்போர்ட்' அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பு வதற்கு முன், அதற்கான தகவல் படிவத்தை நிரப்பி, கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பி, அனுமதி பெற வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருந்தால், நிராகரிக்குமாறு, மண்டல "பாஸ்போர்'ட் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையின் கீழுள்ள ஆசிரியர்கள் மட்டுமின்றி, கல்வித்துறை ஊழியர் களும், வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் பட்சத்தில், கல்வித்துறை இயக்குனர் பார்வைக்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெற்ற பிறகே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.