சிலிண்டர் சப்ளையில் கமிஷனுக்கு 'குட்பை': மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

சமையல் காஸ் சிலிண்டருக்கு, இணைய தளம் மூலம் பணம் செலுத்தும் திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

பொதுத்துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், தங்கள் ஏஜன்சிகள் மூலம், வீடுகளுக்கு, சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்கின்றன. ஏஜன்சி ஊழியர்கள், சிலிண்டருக்கு, பில் தொகையுடன், 50 ரூபாய் வரை கமிஷன் கேட்கின்றனர்.

கமிஷன் பணம் தர மறுத்தால், 'வீட்டில் ஆட்கள் இல்லை' என, கூறி, சிலிண்டரை திரும்ப எடுத்து செல்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இணைய தளம் மூலம் சிலிண்டர் முன் பதிவு மற்றும் பணம் செலுத்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

எனினும், இதுகுறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரியாததால், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, எஸ்.எம்.எஸ்., மூலம், சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு, வீட்டில் சப்ளை செய்யும் போது, பணம் வசூலிக்கப்படுகிறது. முன் கூட்டியே பணம் செலுத்தாததால், வீட்டில் ஆட்கள் இல்லாத போது, சிலிண்டர் ரத்து செய்வது தொடர் கதையாகி வருகிறது.

புதிய திட்டத்தின் படி, ஏற்கனவே பணம் செலுத்தப்படுவதால், சிலிண்டரை திரும்ப எடுத்து செல்வது குறையும். இத்திட்டம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், திட்டத்தின் பலன் மக்களை சென்றடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


திட்டம் செயல்பாடு எப்படி?

● புதிய திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம், சிலிண்டர் பதிவு, பணம் செலுத்த விரும்புவோர், தங்கள் சிலிண்டர் பெற்றுள்ள எண்ணெய் நிறுவனங்களின் இணையதள பகுதிக்கு செல்ல வேண்டும்

● அதில், 'ஆன்லைன் கஸ்டமர்' ஆக பதிவு செய்ய வேண்டும். இதற்கு, காஸ் பதிவு எண், ஏஜன்சி பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிய வேண்டும்

● பின், அவருக்கு தனி, 'லாக் இன், பாஸ் வேர்டு' வழங்கப்படும்

● அதன் மூலம், சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்

● 'கிரெடிட், டெபிடிட் கார்டு, நெட் பேங்கிங்' மூலம், பணம் செலுத்தலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி