அரசின் இலவச பொருட்களை திருப்பி கொடுத்த ஆசிரியை

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து, அளிக்கப்பட்ட இலவச பொருட்கள் எனக்கு தேவை இல்லை' எனக்கூறி, ஆசிரியை ஒருவர் பொருட்களை திருப்பி அளித்தார்.

சென்னை, அண்ணாநகர் மேற்கு, திருவல்லீஸ்வரர் நகரில், பயனாளிகளுக்கு இலவச பொருட்களான மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் போன்றவை நேற்றுவழங்கப்பட்டன. அவற்றை பெற்ற, திருவல்லீஸ்வரர் நகரை சேர்ந்த ஆசிரியை நர்மதா நந்தகுமார், 37, வாங்கிய இடத்திலேயே திருப்பி அளித்தார்.

பின், அவர் கூறியதாவது:மது விற்ற பணத்தில், தமிழக அரசு இயங்கி வருகிறது. அந்த பணத்தில் இருந்து வாங்கிய இலவச பொருட்களை வாங்க மறுத்து, திருப்பி அளிக்க முடிவெடுத்தேன்; அதன்படி திருப்பி கொடுத்து விட்டேன்.என் தந்தை மதுவுக்கு அடிமையானதால், குடும்பம் நிலைகுலைந்தது. என் குடும்பம் போன்று, எத்தனையோ குடும்பங்கள் மதுவால் பாதிக்கப்பட்டு உள்ளன.என் போன்றோர் எதிர்ப்புக்கு பிறகாவது,தமிழக அரசு மது விலக்கை அமல்படுத்தினால், நான் எடுத்த இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நினைத்து மகிழ்வேன்; பல குடும்பங்கள்காப்பாற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

பொங்கல் பரிசுபுறக்கணிப்பு:

தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகள் மூலம், பொங்கல் பரிசாக, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 100 ரூபாய் மற்றும், 2 அடி கரும்பு வழங்கப்படுகிறது. குரோம்பேட்டை, நியூகாலனியை சேர்ந்த சமூக ஆர்வலரான சந்தானம், 78, அதை வாங்க மறுத்து புறக்கணித்து உள்ளார்.அவர் கூறியதாவது:ஒரு கரும்பு துண்டு, 250 கிராம் வெல்லம் வாங்க முடியாத நிலையில், தமிழக மக்கள் உள்ளனரா? அப்படி எனில், இரண்டு கோடிமக்களும் வறுமையில்உள்ளார்கள் என, அர்த்தமா? 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்ற வார்த்தைக்கு பதில், ரேஷன் கடைகளில் இலவச பொருட்களுக்கு கையேந்தி நிற்கும் நிலை உருவாகிவிட்டது.இவ்வாறு அவர்கூறினார்.
-

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி