இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய பிரச்சினை!

இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய பிரச்சினை!


உலகின் மிகப் பெரிய ரயில்வே நிறுவனங்களில் இந்திய ரயில்வே நாலாவது இடத்தை வகிக்கிறது. ரயில் பாதையின் மொத்த நீளம் 1,15,000 கிலோ மீட்டர். மொத்த ரயில் நிலையங்கள் 7,112. ஒரு நாளைக்கு சுமார் 2 கோடியே 30 லட்சம் பேரும், ஆண்டுதோறும் 839.7 கோடிப் பேரும் ரயில்களில் செல்கின்றனர். ஆண்டுக்கு 10588.10 லட்சம் மெட்ரிக் டன்கள் சரக்குகள் கையாளப்படுகின்றன. 12,617 பயணிகள் ரயில்களும் 7,421 சரக்கு ரயில்களும் ஓடுகின்றன. 16 மிகப் பெரிய மண்டலங்களாக இந்திய ரயில்வே துறை பிரிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பூர்வ பீடிகையும் இந்திய ரயில்வே எவ்வளவு பெரியது என்று காட்டத்தான். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 13.34 லட்சம். இவர்களில் அதிகாரிகள் மட்டும் 17,100. மொத்த ஊழியர் களில் 2% மருத்துவர்கள், ரயில் பாதுகாப்புப் படை வீரர்கள் தவிர இதர ரயில் ஊழியர்கள் எண்ணிக்கை 12.20 லட்சம். இவ்வளவு பேருக்கும் ஆண்டு தோறும் அளிக்கும் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வுபெற்ற ரயில் ஊழியர்களுக்கான ஓய்வூ தியம் போன்ற செலவு மட்டும் ரூ.76,242 கோடி. ஊதியம், படிகள், ஓய்வூதியம் போன்றவற்றுக்கான செலவு மட்டும் மொத்த வருவாயில் 55%.

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கடந்த ரயில்வே பட்ஜெட் டில் புதிய ரயில்களைப் பற்றிய அறிவிப்பு, புதிய பாதை, ரயில்பாதை இரட்டிப்பு, ரயில் பாதை மின்மயமாக்கல் போன்ற திட்டங்கள் எதையும் அறிவிக் காமல் ரயில் பயண, சரக்குக் கட்டணங்களை மட்டும் உயர்த் தினார். இதற்குக் காரணம் ரயில்வேயைச் சீரமைத்தே தீர வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டதுதான். சுமார் 10 ஆண்டுகளாக ரயில் கட்ட ணங்கள் உயர்த்தப்படவேயில்லை.

இதனால் கடன் வாங்கியும், பொது பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கியும் சமாளிக்கப்பட்டது. ரயில் துறையை மேம்படுத்த விவேக் தேவராய் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இதன் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆள்குறைப்பு யோசனைகளை ரயில்வே தொழிற் சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில், ஆள் குறைப்பு, பணி மேம்பாடு தொடர்பாக ஆலோசனை கூற ‘டெலாய்ட்’ என்ற நிறுவனம் பணிக்கப்பட்டிருக்கிறது. 2016 மார்ச் 31-க்குள் இந் நிறுவனம் பரிந்துரையை அளித்தாக வேண்டும்.


18 லட்சமாக இருந்தது

சில ஆண்டுகளுக்கு முன்னால் ரயில்வேயின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 18 லட்சமாக இருந் தது. அதை படிப்படியாகக் குறைத்து 13 லட்சமாக்கினார்கள் இதை மேலும் 11 லட்சமாகக் குறைக்க நிறையப் பிரிவுகளை இயந்திரமயமாக்க வேண்டும். நிதி போதவில்லை. ஆள் குறைப்பை முதலில் அதிகாரிகள் நிலையில் தொடங்கினார்கள். அதிகா ரிகள், ஊழியர்கள் இரு பிரிவின ரையும் ஆள் பற்றாக்குறையுள்ள பிரிவு களுக்கு மாற்றுகின்றனர். தேவைப் பட்டால் பயிற்சி தருகின்றனர். இதைத் தொழிற்சங்கங்கள் விரும்ப வில்லை.




சில பிரிவுகளில் ஓய்வு பெறுவோரின் பணியிடங்கள் நிரப்பப் படாமல் சரண் செய்யப்படுகிறது. புதிய நியமனம் கோராமல் விடுகின்றனர். ஆண்டுதோறும் 3% ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். 1% ஊழியர்கள் மட்டுமே புதிதாக வேலைக்கு எடுக்கப் படுகின்றனர்.

ரயில்வேதுறை சீரமைக்கப்படாமலும் இல்லை; சீரமைப்பு வேகம்தான் போதவில்லை. 1950-51-ல் மேற்பார்வை யாளர்கள் ஊழியர்கள் விகிதாசாரம் 25:75 என்று இருந்தது. 2013-14-ல் அதுவே 10:90 என்றாகிவிட்டது. ஊழியர்களைக் குறைப்பதைத் தொழிற்சங்கங்களும் அந்தந்தப் பிரிவுகளும் வெவ்வேறு காரணங்களுக்காக எதிர்க்கின்றன. ஆள்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே தங்களுடைய வேலைத்திறன், வேகம், தங்களால் கிடைக்கும் உற்பத்தி மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுகிறார்கள் என்று ஊழியர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இது அறிவியல் பூர்வமாக இல்லை என்கின்றனர்.


செலவு அதிகரிப்பு

10 ஆண்டுகளாக டீசல் விலை உயர்ந்து வந்தபோதும் கட்டணம் உயர்த்தப்படாததால் அதிக செலவு ஏற்பட்டது. துறைக்குத் தேவைப் படும் இயந்திரங்களையும் கருவிக ளையும் வாங்கியதில் செலவு அதிகரித்தது. வருவாய் குறைந் தாலும் ஊதியம் உயர்ந்தன. மின்சாரத்துக்கு அதிகக் கட்டணம் செலுத்த நேரிட்டது. சரக்குக் கட்டணத் தை உயர்த்தாத நிலையில்கூட சாலைப் போக்குவரத்தின் ஈர்ப்பு காரணமாக சரக்குப் போக்குவரத்து அளவு குறைந்தது.


புதிய திட்டங்கள்

ஏற்கெனவே அறிவித்த திட்டங்களைக் காலவரம்புடன் முடிக்க வேலைகளை விரைவுபடுத்துவது, செலவுகளைக் குறைப்பது, பயணிகளுக்கும் சரக்கு களை அனுப்புவோருக்கும் சேவை யை அதிகரிப்பது என்று துறை திட்டமிட் டிருக்கிறது. ரயில்வே படிநிலையில் 13 அடுக்குகள் உள்ளன. இவற்றைக் குறைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களைப் பணித்திறம் மிக்கவர்களாக்குவது, ரயில்வே துறையை நிறுவனமாகவே நடத்துவது, செலவுகளைக் குறைப்பது, வருவாயைப் பெருக்குவது, என்ற லட்சியங்களுடன் ரயில்வே துறை செயல்பட வேண்டும். தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இதில் தலையிட்டு நிர்வா கத்தைச் சீர்குலைக்க அனுமதித்தால் எதிர்காலத்தில் இது மிகப்பெரிய நிதிச்சுமை துறையாக மட்டுமே இருக்கும், வளர்ச்சியோ முன்னேற்றமோ இருக்காது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி