விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா: இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு

ப்ரவஹெச் 1 பி மற்றும் எல் 1 விசா கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தி இருக்கிறது. இந்த விசா மூலம்தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு தங்கள் பணியாளர்களை அனுப்புகின்றன.தற்போது உள்ள கட்டணத்தைக்காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

டிசம்பர் 18, 2015-ம் தேதி முதல் இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்துமாறு யுஎஸ்சிஐஎஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல எல்-1ஏ மற்றும் எல்-1பி விசாக்களைப் பெற்று பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக 4,500 டாலர் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதியமைப்பு சட்டத்துக்கு பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் 50-க்கும் மேலான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ள நிறுவனங்கள் இந்த கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். அல்லது ஊழியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஹெச் 1 பி விசா அடிப்படையில் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும். அல்லது எல் -1ஏ மற்றும் எல் – 1பி விசாவில் பணி புரியும் ஊழியர்களுக்கும் இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும்.

இந்த கூடுதல் கட்டணமானது ஏற்கெனவே செலுத்த வேண்டிய பரிசீலனைக் கட்டணம், மோசடி ஏய்ப்பு மற்றும் கண்டுபிடித்தல் கட்டணம், அமெரிக்கர்களின் வேலை மேம்பாட்டு சட்டம் 1998-ன் கீழான கட்டணம் ஆகியவற்றுடன் இது கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டணமாகும். இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 2025 வரை அமலில் இருக்கும் என்று யுஎஸ்சிஐஎஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

புதிய சட்டத்தின்படி தேவையான தகவல்கள் சேர்க்கப்படாத விசா விண்ணப்பங்களை பிரி 11 முதல் நிராகரிக்கப் போவதாக யுஎஸ்சிஐஎஸ் தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தின்படி விண்ணப்பங்களை மாற்றியமைத்துள்ளது யுஎஸ்சிஐஎஸ்.

தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 140 கோடி டாலர் முதல் 160 கோடி டாலர் திரட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி