திண்டுக்கல் மாவட்டத்தில் இணையதளம் மூலம் ரேசன் கார்டுகளை புதுப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளை நிற ரேசன் கார்டுகளை இணையதளம் மூலமாக புதுப்பித்துக்கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன் கார்டுகளுக்கு இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு அந்த கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.எப்பொருளும் வேண்டா தோருக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிறமுடைய குடும்ப அட்டைகளும், இருப்பிட முகவரி ஆதாரத்திற்காக ‘‘தட்கல்’’ முறையில் வழங்கப்பட்டுள்ள மஞ்சள் நிறமுடைய குடும்ப அட்டைதாரர்களும் நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர்கள் நியாய விலைக்கடைகளுக்கு வருவதில்லை.

மேற்கூறிய குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்த பிறகு அவர்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டி பராமரிக்கும் விதமாக குடும்ப அட்டை காலநீட்டிப்பு பதிவுச் சீட்டு கணினியில் அச்சடித்து குடும்ப அட்டைகளில் ஒட்டிக் கொள்ளும் விதமாக அளிக்கப்படும். இதனை மேற்கூறிய குடும்ப அட்டை தாரர்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளில் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த வசதிகள் ஜனவரி 12–ந் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. குடும்ப அட்டை தாரர்கள் இவ்வசதிகளை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி