இஸ்ரோவில் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ISRO Propulsion Complex (ISRO)-ல் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: ISRO Propulsion Complex (ISRO)

காலியிடங்கள்: 05

பணி இடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Technical Assistant (Mechanical) - 01

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600

2. Technician B (Fitter) - 03

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

3. Technician B (Refrigeration & Air Conditioning) - 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

4. Technician B (Electronics) - 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.

வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.jpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The administrative Officer recruitment section,

ISRO Propulsion Complex (IPRC), Mahendragiri Post, Tirunelveli District, Tamil Nadu - 627133.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2016

ஆன்லைனி விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 29.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://career.iprc.gov.in:8080/common/advt.jsp என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி