நாட்டில் உள்ள, 128 கோடி மக்கள்தொகையில், 2015, டிசம்பர் 31 வரையில், 95 கோடி பேருக்கு, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, 2009ல் தொடங்கப்பட்டு, இதுவரை, 7,100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள, இந்த திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 92 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரலாற்று சாதனை நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்டது. இது, உலக நாடுகள் எங்கும் காண முடியாத சாதனையாக, மத்திய அரசு வட்டாரங்கள் கருதுகின்றன. சமையல் காஸ் உள்ளிட்ட சில திட்டங்களுக்கான மானியம், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள, தனி நபர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. எவ்வித சிக்கலும் இன்றி, மானிய பலன்கள், சமையல் காஸ் பெறுபவர்களுக்கு கிடைக்கிறது. அரசின் மானியங்களை பெறக் கூடியவர்களாக உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 92 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை கிடைத்துள்ளதால், அரசு மற்றும் பிறவிண்ணப்பங்கள் வெளிப்படையானதாகவும், குழப்பம் இன்றியும் நடைபெறுகின்றன.மேலும், ஆதார் வாயிலாக, மானியங்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதால், போலி பெயர்களில் சுருட்டுவது, லஞ்சம், ஊழல் தடுக்கப்படுகிறது.
ரூ.60 ஆயிரம் கோடி தப்பும்!
*அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களைப் பெறுபவர்களில், 15 சதவீதம் பேர் போலியான, பொய்யான பெயர்களில் அந்த பலன்களை அனுபவித்து வந்தனர். ஆதார் அதிகரிப்பால், அந்த முறைகேடுகள் களையப்படுகின்றன
* ஆண்டுக்கு, 3.5 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இது, நேரடியாக பயனாளிக்கு கிடைக்கும் போது, 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை, போலிகளுக்கு செல்லாமல் தடுக்கப்படும்.
'ஆதார்' என்றால் என்ன?
* ஒவ்வொருவருக்கும், 12 இலக்க எண்கள் வழங்கப்படுகிறது. அதில், பெயர், வயது, முகவரி, புகைப்படம் இடம்பெற்றுள்ளது
* விரல் ரேகைகள், கண் மணியும் பதிவு செய்யப் படுகின்றன. இதனால் ஒருவர் பெயரில், ஒரு ஆதார் அட்டை தான் பெற முடியும்
* இதுவும் ஒரு அடையாள அட்டை தான். ஆனால், இந்த அட்டையை வைத்து இந்தியக் குடியுரிமைஉட்பட எந்த உரிமையையும் கோர முடியாது
* ஆதார் அட்டை பெறாதவர்கள், ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற விவரங்களையும், ஆன்லைன் மூலமாகவே திருத்திக் கொள்ளலாம்.
சட்ட அங்கீகாரம் இல்லை!:
கடந்த 2010 முதல் ஆதார் அட்டை வழங்கப் படுகிறது.கர்நாடக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசுவாமி, 2012, நவம்பரில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். எவ்வித சட்டப் பாதுகாப்பும் இல்லாமல், ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டுஉள்ளதால், அதை கட்டாயமாக்கக் கூடாது என கோரினார்.
அதன் பிறகு, மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது வரை, ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்படவில்