குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு

குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணி நேரத்தில் காலத்தில், குழந்தைகளை கவனித்து கொள்ள, இரண்டு ஆண்டுகள், அதாவது, 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம்.

குழந்தைகளுக்கு தாயின் கவனிப்பு தேவை என்பதால், பெண் ஊழியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. எனினும், குழந்தைகளுக்கு, 18 வயதாகிவிட்டால்,இந்த சலுகை வழங்கப்படமாட்டாது.இந்நிலையில், குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக, ஒரே கட்டமாக, ஐந்து நாட்கள் வரை விடுமுறை எடுக்க, பெண் ஊழியர்களுக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள, பெண்கள், ஐந்து நாட்கள் விடுமுறை கேட்டால், உடன் வழங்க வேண்டும் எனவும், உயர் அதிகாரி களுக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துஉள்ளது.

இது தொடர்பான கருத்துகளை, 27ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கேட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி