தக்கல் டிக்கெட்: 35 விநாடிகளுக்கு பின்னரே இணையம் மூலம் பதிவு செய்ய முடியும்

ரயில்வேயில் தக்கல் டிக்கெட்கள் அனைத்தும் இணையம் வழியாக பதிவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முதல் 35 வினாடிகளுக்குப் பின்னரே இணையம் வழியாக பதிவு செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ரயில் டிக்கெட்களை முன் பதிவு செய்வதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்து ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.மனோசா, ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் செயல் இயக்குநர் சஞ்சய தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ரயில்வேயில் தக்கல் டிக்கெட்டுகள் அனைத்தும் கணினி மூலமே பதிவு செய்யப்படுவதால், முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்பவர்களுக்கு டிக்கெட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மையல்ல.முன்பதிவு மையங்களில் தக்கல் டிக்கெட் விற்பனை தொடங்கிய 35வது விநாடிக்குப் பின்னரே ஐஆர்டிசி இணையதளம் மூலம் தக்கல் டிக்கெட்கள் பதிவு செய்யும் வகையில் கணினியில் நிகழ்ச்சிநிரல் அமைக்கப்பட்டுள்ளது.உதராரணமாக ஜனவரி 10 ஆம் தேதி ஏ.சி பெட்டிகளுக்கான தக்கல் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய முதல் 35 விநாடிகளில் ரயில்வே முன்பதிவு மையங்களில் மட்டும் 1,404 டிக்கெட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஐஆர்சிடிசி இணையத்தில் ஒரு டிக்கெட் கூட பதிவு செய்யப்படவில்லை. அதற்கு பின்புதான் இணையதளம் மூலம் தக்கல் டிக்கெட்கள் பதிவு செய்யப்படுகின்றன.இதிலிருந்து, 20 வினாடிக்குள் டிக்கெட் பதிவு செய்து தருகிறோம் என கூறும் தனியார் முன்பதிவு மையங்களின் கூற்றில் உண்மையில்லை என தெரியவருகிறது.அடுத்த தலைமுறை இணையவழி டிக்கெட் பதிவு செய்யும் முறை (NGeT) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல்வேறு வகையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி