மைசூருவில் இந்திய அறிவியல் மாநாடு: 3-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும்

இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய அறிவியல் மாநாடு கர்நாடக மாநிலம் மைசூருவில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது

. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை கர்நாடகாவுக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மைசூருவுக்கு வரும் மோடி கணபதி சச்சிதானந்த சுவாமியின் அவதூத தத்த பீடத்துக்கு செல் கிறார். அங்கு புதியதாக கட்டப் பட்டுள்ள மருத்துவமனையை மோடி திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் சுத்தூர் மடத்தின் மறைந்த சிவராத்திரி ராஜேந்திர மகாசுவாமியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.இதையடுத்து மைசூரு பல் கலைக்கழக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மானச‌கங் கோத்ரியில் நாளை மறுநாள் இந்திய அறிவியல் மாநாட்டை மோடி தொடங்கி வைக்கிறார். வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 15 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

இதுதவிர பல்வேறு நாடு களைச் சேர்ந்த 400 விஞ்ஞானி கள், 400 ஆராய்ச்சியாளர்கள், 100 அறிவியல் நிபுணர்கள் உள் ளிட்டோர் கலந்துகொள்கிறார் கள். இதில் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றும் மோடி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 28 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்குகிறார்.இதையடுத்து துமகூரு மாவட்டம் நிட்டுர் கிராமத்தில் எச்.ஏ.எல். நிறுவனம் சார்பில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள புதிய ஹெலிகாப்டர் தயா ரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.மேலும் பெங்களூரு அருகே யுள்ள ஜிகினியில் நடைபெறும் 21-வது சர்வதேச யோகா ஆராய்ச்சி மாநாட்டையும் மோடி தொடங்கி வைக்கிறார். அங்கு சிறப்புரையாற்றிய பிறகு டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருவதால் மைசூரு, துமகூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாதுகாப்பு பணிகளில் 5 ஆயிரத் துக்கும் அதிகமான போலீஸார் ஈடுபட்டுள்ளதாக கர்நாடக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400 விஞ்ஞானிகள், 400 ஆராய்ச்சியாளர்கள், 100 அறிவியல் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி