சென்னை, கோவை உட்பட ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்படவுள்ளமுதல் 20 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு இன்று(வியாழக்கிழமை)அறிவித்தது.
மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நகரங்கள்:
1. புவனேஸ்வர், ஒடிசா | 2. புணே, மகாராஷ்டிரா | 3. ஜெய்ப்பூர்,ராஜஸ்தான்
4. சூரத், குஜராத் | 5. கொச்சி, கேரளா | 6. அகமதாபாத், குஜராத்
7. ஜபால்பூர், ராஜஸ்தான் | 8. விசாகப்பட்டிணம், ஆந்திரம் | 9.ஷோலாபூர், மகாராஷ்டிரா
10. தேவனகிரி, கர்நாடகம் | 11. இந்தூர், மத்திய பிரதேசம் | 12.புதுடெல்லி மாநகராட்சி
13. கோவை, தமிழ்நாடு | 14. காகிநாடா, ஆந்திரம் | 15. பெலாகவி,கர்நாடகம்
16. உதய்பூர், ராஜஸ்தான் | 17. கவுகாத்தி, அஸாம் 18. சென்னை,தமிழ்நாடு
19. லூதியானா, பஞ்சாப் | 20. போபால், மத்தியப் பிரதேசம்
ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன?
முன்னதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, '98நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் உள்ளன. இதில், முதல் 20நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது.
இந்த நகரங்கள், போதுமான குடிநீர், மின்சாரம், சுகாதாரம், திடக்கழிவுமேலாண்மை, பொதுப் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, மின்ஆளுமை, பொதுமக்கள் பங்களிப்பு என அனைத்துவித கட்டமைப்புகள்உடையதாக மேம்படுத்தப்படும்.
நாட்டில் 100 திறன்மிகு நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கதிட்டமிட்டுள்ளது. முதற்கட்ட 20 நகரங்களின் பெயர்களைத்தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 40 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு அறிவிக்கும்.
நகர்ப்புற மேம்பாடு சவாலாக உள்ளது. நகர்ப்புறங்களில் தொடர்ந்துநிலவும் நேர்மை யின்மை, தேசிய பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.எனவே, அம்ருத், ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஸ்வச் பாரத், பிரதான் மந்திரிஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) போன்ற திட்டங்கள் மூலம் நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த அரசுமுனைப்பு காட்டி வருகிறது.
மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் இளம் இந்தியாவுக்காக, நகர்ப்புறத்தை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது" என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் பட்டியலைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் கோவை நீங்கலாக, இன்னும் மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு,தூத்துக்குடி, திண்டுக்கல், வேலூர், திருப்பூர், தஞ்சாவூர் ஆகியநகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாகத் தரம் உயர்த்தப்படும் இந்திய நகரங்கள்பட்டியலில் உள்ளன.