பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள 27,499, எஸ்.எஸ்.எல்.சி. 24,665 மாணவர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 27ஆயிரத்து 499, மாணவர்களும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 24ஆயிரத்து 665 மாணவர்களும் எழுத உள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 4- ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைகிறது.


எஸ்.எஸ்.எல்.சி. பொதுதேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக தயாராகி வரும் நிலையில், கல்வி அதிகாரிகள் தேர்வுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்று பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஆன்லைனின் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், தேர்வு மையங்களைத் தேர்வு செய்தல், அங்குள்ள வசதிகள் ஆகியவை குறித்து, தகவல்கள் சேகரிக்கப்பட்டு,தேர்வு மையங்கள் உறுதி செய்யப்பட்டு, மாநில தேர்வுத் துறை இயக்குநரகத்தின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 76 தேர்வு மையங்களில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. தற்போது, 75 மையங்களில் இத் தேர்வு நடைபெறுகிறது.


இதில், அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் மொத்தம் 27ஆயிரத்து499 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.இதேபோல, வரும் மார்ச் 15-ஆம் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.ஸி.பொதுத் தேர்வை 24ஆயிரத்து665 மாணவ, மாணவியர் எழுது கின்றனர். இதற்காக, 85 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி