பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் குழந்தைகள் பலரும் நடித்துள்ள படம், பசங்க 2. இந்தப் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
இதற்காக 2டி எண்டர்டெயிண்மென்ட் சார்பாக, பாண்டிராஜுக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார் சூர்யா.படத்துக்கு மேலும் கூட்டம் வருவதற்காக புதுச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பசங்க 2 படத்தைப் பார்க்க வருகிற 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதிஇலவசம் என்றும் அவர்கள் இந்தப் படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாகப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சலுகை கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.