யாருக்கு வாக்களித்தோம் உடனே தெரிந்து கொள்ளலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

தமிழகத்தில் 2016 சட்டசபைத் தேர்தலில் 'யாருக்கு வாக்களித்தோம்,' என்பதை வாக்காளர்கள் உடனேதெரிந்து கொள்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்ய தேர்தல்ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரே கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கேவாக்குகள் பதிவு ஆவதாக, ஒவ்வொரு தேர்தலில்போதும் சில அரசியல் தலைவர்கள் சர்ச்சை எழுப்புகின்றனர். இதனால் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தலை நடத்த வேண்டுமென,வலியுறுத்தினர். இதை தவிர்க்கும் வகையில், தேர்தலில்யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வி.வி.,பேட்இயந்திரம் பொருத்தப்படும். வாக்காளர் வாக்களித்தவுடன் வி.வி.,பேட் இயந்திரத்தில் இருந்து வாக்காளித்த சின்னம், வேட்பாளர் பெயர் அடங்கியஅச்சிடப்பட்ட பேப்பர் வெளியே வரும். பின் சிறிதுநேரத்தில் அந்த பேப்பர் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட பெட்டிக்குள் சென்றுவிடும். வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி