பேஸ்புக் கணக்கை தொடங்கியது பிஎஃப் அமைப்பு

பிஎஃப் அமைப்பு பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்கினை தொடங்கியது. ஹைதராபாத்தில் நடந்த சிறந்த நிர்வாக நாள் நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தொடங்கி வைத்தார். பிஎஃப் அமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கோரிக்கைகள், கருத்துகள், எண்ணங்களை தெரிவிக்க மேலும் ஒரு வழியாக இந்த சமூக வலைதளங்கள் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கருத்துகளை சொல்வது மட்டுமல்லாமல் பிஎஃப்அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், புதிய நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் சேவைகளை தெரிவிக்கவும் இந்த சமூக வலைதளங்கள் பயன்படும் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி